சீன ஹோட்டல் துறைச் சங்கத்தின் துணைத் தலைமைச் செயலாளர் சாங் மிங்ஹொ எமது செய்தியாளரிடம் பேசுகையில், தற்போது சீனாவின் சிக்கன ரக ஹோட்டல் சந்தையில் முறைமையற்ற நிலைமை நிலவுகின்றது. சிக்கன ரக ஹோட்டல் என்றால் என்ன என்பது பற்றி பலர் முழுமையாக அறிந்துகொள்ளவில்லை. ஹோட்டல் நடத்துவோர், சிக்கன ரக ஹோட்டல் என்று கூறி நுகர்வோரை ஏமாற்றுவதால், சில முறையான தொழில் நிறுவனங்களின் அலுவல் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். சந்தையை ஒழுங்குப்படுத்தும் பொருட்டு, ஹோட்டல் துறையின் வரையறையைத் தொடர்புடைய சங்கம் வகுத்துவருகின்றது. அவர் மேலும் கூறியதாவது,
தற்போது எங்கள் சங்கம், வணிகச் சின்னமுடைய சில பெரிய சிக்கன ரக ஹோட்டல்களுடன் இணைந்து இத்துறையின் வரையறையை வரைந்துவருகிறோம். அத்துடன், முன் மாதிரியாக விளங்கும் ஹோட்டலை உருவாக்கி, சிக்கன ரக ஹோட்டல்களின் அலுவலை தெளிவுப்படுத்துவோம். தொடர்புடைய வரையறை அடுத்த ஆண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றார் அவர்.
சிக்கன ரக ஹோட்டல் துறையின் வளர்ச்சியில் சீன அரசு மிகவும் கவனம் செலுத்துகின்றது. இத்தகைய ஹோட்டல்களை முயற்சியுடன் வளர்க்க வேண்டும் என்று சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிக்கன ரக ஹோட்டல் துறை வளர்ச்சியடைவது என்பது, நடுத்தர மற்றும் தாழ்ந்த நிலை ஹோட்டல் மீதான சந்தையின் தேவையை நிறைவு செய்வதோடு, வேலை வாய்ப்பை அதிகரித்து, பொருளாதாரத்தையும் வளப்படுத்தும். அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் சிக்கன ரக ஹோட்டல் துறையின் வளர்ச்சி பற்றி சாங்மிங்ஹொ கூறியதாவது,
சீனாவின் சிக்கன ரக ஹோட்டல், எதிர்கால ஹோட்டல் துறையில் முக்கிய இடம் வகிக்கும். அடுத்த பத்து ஆண்டு கால வளர்ச்சிக்குப் பின்னர், சந்தையில் அது 70 முதல் 80 விழுக்காடு வரை வகிக்கும். சிக்கன ரக ஹோட்டல்களில் தங்கியிருக்கும் விருந்தினர்களில் 92 விழுக்காட்டினர் உள் நாட்டுப் பயணியராக இருப்பதால், அடுத்த சில ஆண்டுகளில் சீனாவின் சிக்கன ரக ஹோட்டல் எனும் தேசிய இனச் சின்னம் மிக வலுவான இடம் வகிக்கக் கூடும் என்றார் அவர்.
நேயர்கள் இதுவரை, விறுவிறுப்பாக வளரும் சீனாவின் சிக்கன ரக ஹோட்டல் துறை பற்றி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவுற்றது. 1 2 3
|