பாண்டிச்சேரி என்.பாலகுமார் வரலாற்றுச் சுவடு நிகழ்ச்சியை கேட்டு தெரிவித்த கருத்து வரலாற்றுச் சுவடு என்ற புதிய நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் பல்சுவை நிகழ்ச்சியாக வருகிறது. இந்த வாரத்தில், அதாவது இந்த தேதியில், கடந்த கால நினைவுகளை நினைத்து பார்க்கும் சுவையான நிகழ்ச்சியை நான் வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலம், பல வரலாற்று சம்பவங்களையும், விளையாட்டு நிகழ்வுகளையும், எழுத்தாளர்கள் பற்றியும், சீன மக்களின் மறக்க முடியாத நிகழ்வுகளையும் பற்றியும் அறிய முடியும் என நம்புகிறேன். நேயர்களிடம் பெரும் வரவேற்பு பெறும் என்பதில் ஐயமில்லை.
........ வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம் கதை வழங்குவதென்ற முறை பற்றி தெரிவித்த கருத்து இதோ. சீனக் கதை துவங்குவதற்கு முன், கதை என்றால் என்ன என்பது பற்றிய சிறிய விளக்கம் அளித்தமைக்கு என் நன்றி. கதையும் ஓர் இலக்கிய வடிவம்தான் என்பதை நேயர்களுக்கு புரியும் வகையில் இந்த முகப்புரையை வழங்கியதற்கு என் நன்றியைத் தெரிவிக்கின்றேன். இன்றைய 'கிணற்றுத் தவளை' நிகழ்ச்சி பற்றி சில கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். முனைவர் ந.கடிகாசலம் அவர்களுக்கு பின், ஆங்கிலச் சொல் இல்லாத, பேச்சுத் தமிழ் இல்லாத ஒரு கதை நிகழ்ச்சியை இன்றுதான் கேட்க முடிந்தது. அதற்காக கிளிட்டஸ் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
1 2 3
|