..........மதுரை-20 என் இராமசாமி உழைப்பாளர்களை பாதுகாக்கும் சட்டம் பற்றி தெரிவித்த கருத்து. சீனாவில் தொழில் நோய்கள் தடுப்பு சட்டத்தின் நடைமுறையாக்க மூலம் உழைப்பாளர்களின் உடல் நலமும் தொழில் நிறுவனக்களின் சமூக பொறுப்பும் என்பது இவ்வாண்டு நடை பெறும் தொழில் நோய் தடுப்பு சட்டம் பற்றிய பிரச்சார நடவடிக்கையின் தலைப்பு ஆகும். உழைப்பாளர்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்ட சீன அரசு தொழில் நோய்கள் தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது என்பதை அறித்து கொண்டேன். இச்சட்டம் உழைப்பாளர்களுக்கு ஒர் வரப்பிரசாதமாகும். .......... செய்தித் தொகுப்பு பற்றிய வளவனூர் முத்துசிவக்குமரனின் கருத்தை படிக்கின்றோம்.

சீனத் தேசிய பொருட்காட்சி பற்றிய செய்தி தொகுப்பை கேட்டேன். இது போல் ஒரு நாட்டின் பொருட்காட்சி மற்றொரு நாட்டில் நடக்கும் போது தான் எல்லா நாடுகளின் கலாச்சாரமும் பண்பாடும் மற்ற நாட்டு மக்களுக்கும் உணர்வதாக அமையும். அன்றைய மக்கள் சீனம் பகுதியில் வறியவர்களின் குறைகளைத் தீர்க்க சீனாவில் எல்லா வித முயற்சிகளும் செய்யப்பட்டு, வறியவர்களே இல்லாத நிலை உண்டாகிறது என்ற செய்தியும், சீன அரசின் தொலைநோக்கு பார்வை, வறுமை என்ற சொல்லே, சீனாவில் இல்லாமல் செய்யும்படியாக அமைந்துள்ளது.
............பெருந்துறை பல்லவி கே பரமசிவன் தேசியப் பொருட்காட்சி நடத்துவது பற்றி தெரிவித்த கருத்து பார்க்கின்றோம்.
1 2 3
|