சீனத் தேசியப் பொருட்காட்சி என்னும் செய்தி தொகுப்பு கேட்டேன். ரஷ்யாவில் துவங்கும் இந்த பொருட்காட்சி வெற்றிகரமாக நடைப் பெற்றதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போல் உலக நாடுகள் அணைத்திலும் பொருட் கட்சிகளை போட்டு சீன தனது திறமையை நிரூபிக்க வேண்டும். ...................இலங்கை யாழ்பானம் ஈசன் கடல் பொருளாதாரம் தெரிவித்த கருத்து இதோ. சீனாவின் கடல் பொருளாதாரம் பற்றி இணையத் தளத்தில் படித்தேன். முதன்முறையாக 2006ஆம் ஆண்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 10 விழுக்காடு வகிப்பது பாரட்டத்தக்க விடயமாகும். அத்துடன் சீனாவில் பல்வேறு முக்கிய கடல் தொழில்கள், சீரான வளர்ச்சி போக்கை தொடர்ந்து நிலைநிறுத்தியுள்ளன. குறிப்பாக கடல் கப்பல் தொழில், கடல் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு தொழில், முதலியவற்றின் கூட்டு மதிப்பு, 2005ம் ஆண்டில் இருந்ததை விட சராசரியாக 17 விழுக்காட்டை தாண்டியுள்ளமை கடலோர துறைமுகங்களின் ஒட்டுமொத்த போட்டி ஆற்றல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்பதை இலக்காக எடுத்துக் காட்டுகிறது.
......... மதுரை-20 ஆர்.அமுதாராணி நீதி சட்ட பாதுகாப்பு பற்றி தெரிவித்த கருத்து. அறிவு சார் சொத்து உரிமைக்காக சீனாவில் குற்றவியல் நீதி சட்ட பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சீன உச்ச மக்கள் நீதி மன்றமும், சீன உச்ச மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றமும் புதிய நீதி சட்டத்திற்கு விளக்கம் கொடுத்து உள்ளன. இது ஒரு முன்னோடி சட்டமாகும். இதனை மற்ற நாடுகள் பின்பற்றி பயன் அடையலாம். ....... திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன். தேயிலை கடவுள் வூயி குறித்தும் அறியத் தந்தார் ராஜாராம். சீனத் தேயிலையில் பல வகைகள் உண்டு. கோல்டன் டீதான் உயர்வான டீ என நினைக்கின்றேன். அது இன்று 'கிரீன் டீ'. கலையரசி நீண்ட இரண்டு டின்களை வாங்கிக் கொடுத்திருந்தார். இன்றும் எனது வீட்டின் குளிர்சாதன பெட்டியில் உள்ளது. இன்று வரையிலும் டின் முழுவதுமாக காலியாகவில்லை. நெருக்கமான நண்பர்களுக்கு கொடுத்தும் தீரவில்லை. சுவையும் என்னைப் பொறுத்தவரை சிறப்பு. தேநீரும் பச்சையாகவே இருக்கிறது. பொதுவாகவே சீன தேநீரில் சர்க்கரை கலக்க மாட்டார்கள். தேயிலையின் வரலாற்றை வாங்கி, சில நினைவுகளை நினைவு கூற வைத்தது நிகழ்ச்சி. மற்றொரு வகையான ஒரு டீ, அதனை துணியில் முடிந்து பெரிய பாத்திரத்தின் கொதி நீரில் போட்டு விடுவார்கள். சாதாரணமாக நீர் அருந்துவது போல தேநீரை சீனர்கள் அருந்துவர் அல்லவா? 1 2 3
|