• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-14 21:08:23    
நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளின் நலனை உத்தரவாதம் செய்வது

cri

கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் நிலையான சொத்துகளுக்கான முதலீடு வேகமாக அதிகரித்துள்ளதால், சீனப் பொருளாதாரமும் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. ஒட்டுமொத்தப் பொருளாதாரம் சீராக வளர்வதற்கு அறைகூவலும் விடுக்கப்பட்டுள்ளது. இதில், ஏராளமான முதலீட்டுத் திட்டங்களால் கிராமங்களிலுள்ள விளை நிலம் உள்ளிட்ட அதிக அளவிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. சீன நில வள அமைச்சகத்தின் அதிகாரியொருவர் அண்மையில் எமது செய்தியாளரிடம் பேசுகையில், 2006 ஆம் ஆண்டு முதல், நிலச் சட்டத்தை மீறிய வழக்குகளை விசாரனை செய்து தண்டனை விதிக்கும் பணியை சீனா வலுப்படுத்தியுள்ளது. இதனால், விளை நிலத்தை விரும்பியவாறு பயன்படுத்தும் நிலைமை பயனுள்ள முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளது நலனுக்கு உத்தரவாதம் அளிக்கும் உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்.

சீனப் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சியுடன், நாட்டின் பல்வேறு இடங்களில் முதலீட்டு உற்சாகம் தோன்றியுள்ளது. நகரங்களின் சுற்றுப்புறத்திலுள்ள ஏராளமான விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, பொருளாதார வளர்ச்சி மண்டலங்கள் நிறுவப்படுவதற்கும் விற்பனைக்கான வீடுகள் கட்டியமைக்கப்படுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏராளமான விளை நிலங்கள் வரையறுக்கப்பட்டதால், சீனாவுக்குச் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது பற்றி சீன நில வள அமைச்சகத்தைச் சேர்ந்த சட்ட நடைமுறையாக்கக் கண்காணிப்புப்

நிலத்தைச் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கையகப்படுத்திப் பயன்படுத்துவது என்பது, தொடர்புடைய விதிகளை மீறி, வளர்ச்சி மண்டலத்தை நிறுவ, விளை நிலங்களை அதிக அளவில் வரையறுத்துக் கையகப்படுத்துவதைக் குறிக்கின்றது. தற்போது நாடு முழுவதிலும் வளர்ச்சி மண்டலங்களின் பரப்பளவு, நகரங்களில் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் மொத்தப் பரப்பளவை விட அதிகமாகும். சில இடங்களில் உள்ளூர் அரசுகள் அதிகாரத்தை விரும்பிய படி பயன்படுத்தி, விளை நிலத்தை அதிக அளவில் கையகப்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, விவசாயிகளின் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் சீரற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

1 2 3