• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-14 21:08:23    
நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளின் நலனை உத்தரவாதம் செய்வது

cri

நிலப் பயன்பாட்டைக் கண்டிப்பான முறையில் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும் அதே வேளையில் அரசுக்குரிய நிலத்தைக் கட்டணத்துடன் பயன்படுத்தும் முறைமையின் சீர்திருத்தமும் ஆழமாக நடைபெறுகின்றது. அரசு வழங்கும் நிலங்களுக்கு வருவாய் பெறுவது பற்றிய மேலாண்மையைச் சீன அரசு மேலும் முறைமைப்படுத்தி, கட்டணத்துடன் நிலப் பயன்பாட்டுச் செலவை அதிகரித்து, இந்நிதித்தொகையை வேளாண் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமான நிலப் பயன்பாட்டு வழக்குகளைப் புலன் விசாரணை செய்து தீர்ப்பு அளிக்கும் அதே வேளையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளின் உரிமையையும் நலனையும் அரசு பேணிக்காத்துள்ளது என்று லீ யுவான் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறியதாவது,

நிலம் கையகப்படுத்தப்பட்டோருக்கு ஈட்டுத் தொகை வழங்குதல் பற்றிய வரையறையை மத்திய அரசு உரிய முறையில் உயர்த்தி, நிலம் இழந்த விவசாயிகள் சமூக உத்தரவாத அமைப்பு முறை மூலம் நலன் பெறச் செய்துள்ளது. அதாவது, நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை நிலை குறையாத படி உத்தரவாதம் செய்வது, அவர்களுடைய நீண்ட கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பது ஆகிய கோரிக்கைகளுக்கிணங்க, நிலக் கையகப்படுத்தல் ஒழுங்கு முறையை மேம்படுத்துவது, ஈட்டுத் தொகை வரம்பை முறைமைப்படுத்துவது, நிலம் இழந்த விவசாயிகளுக்கு வாழ்க்கை ஏற்பாடு செய்து தருவது, நிலக் கையகப்படுத்தலினால் ஏற்பட்ட சச்சரவுகளை நேரத்தோடு தீர்ப்பது முதலிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது என்றார் அவர்.


1 2 3