கடந்த சில ஆண்டுகளில் நிலப் பயன்பாட்டைக் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்துவதை ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சரிப்படுத்தலில் ஒரு முக்கிய கொள்கையாகக் கொண்டு பல உரிய நடவடிக்கைகளைச் சீன அரசு மேற்கொண்டுள்ளது. பல்வேறு இடங்களில் தொழிற்துறை, வீடு மற்றும் நில உடைமை ஆகிய திட்டப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் நில அளவைக் குறைப்பதோடு, விளை நிலத்தைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் செயலையும் தொடர்புடைய சட்டம் மூலம் ஒடுக்கியுள்ளது.
சீனத் தேசிய நில வளத் துணைத் தலைமைக் கண்காணிப்பாளர் gan zhan chun எமது செய்தியாளரிடம் கூறியதாவது,
சீனாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சரிப்படுத்தலை வலுப்படுத்தி மேம்படுத்தும் பொருட்டு, நிலக் கொள்கையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நகரங்களில் நிலப்பயன்பாடு பற்றி அரசவை பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை எளிதாக்கிப், பரிசீலனை மற்றும் கண்காணிப்பு அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்றுமான கருத்தைத் தெரிவித்துள்ளோம் என்றார்.
கடந்த ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரை, சீனாவில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் நிலங்களைப் பயன்படுத்திய 77 ஆயிரத்து 400 வழக்குகள் விசாரணை செய்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட பத்தாயிரம் ஹெக்டர் நிலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி நிலப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உள்ளூர் அதிகாரிகள் பலருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் நில பரப்பளவைச் சீன நில வள அமைச்சகம் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தியுள்ளது. விளை நிலத்தைப் பயன்படுத்தும் அனைத்து கட்டுமானத் திட்டப்பணிகளும் நிபுணர்களால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தான், ஒப்புதல் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது. நியாயமற்ற முறையில் பயன்படுத்தப்படவிருந்த ஆறாயிரத்துக்கு மேற்பட்ட ஹெக்டர் பரப்பளவுடைய நிலம் அதிலிருந்து தவிர்க்கப்பட்டது. கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்படும் நிலப் பரப்பளவு அதிகரிப்பில், 2005ல் இருந்ததை விட 15.6 விழுக்காடு குறைந்தது. தற்போது நிலங்களை அதிக அளவில் வரையறுத்துப் பயன்படுத்தும் செயல் உரிய முறையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று சீன நில வளத் துணை அமைச்சர் லீ யுவான் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
கடந்த ஆண்டு சீனாவில் புதிய வளர்ச்சி மண்டலங்களின் கட்டுமானமும் விரிவாக்கமும் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளதால், நிலத்தைக் குறிப்பாக விளை நிலத்தை அதிக அளவில் வரையறுத்துப் பயன்படுத்தும் செயல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாகத் துவங்கும் திட்டப்பணிகளின் பரிசோதனையில் பல்வேறு நிலை நில வள நிர்வாக வாரியங்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்குகொண்டு, விதி மீறல் நிலப் பயன்பாட்டுத் திட்டப்பணிகள் பலவற்றைக் கண்டுபிடித்துள்ளன. அளவுக்கு மீறிய நிலச் சொத்து முதலீட்டு அதிகரிப்பு பயனுள்ள முறையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
1 2 3
|