• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-21 14:44:53    
கிழக்காசிய நாடுகளுக்கு பொஒ ஆசிய மன்றம் விடுத்த வேண்டுகோள்

cri

அண்மையில் நிறைவடைந்த பொஒ ஆசிய கருத்தரங்கின் ஆண்டு கூட்டத்தில், கிழக்காசிய பிரதேசத்தின் எரியாற்றல் பாதுகாப்புப் பிரச்சினை, பிரதிநிதிகள் அக்கறை கொண்டுள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது. தற்போது கிழக்காசிய பிரதேசத்தில் எரியாற்றல் சேமிப்பு எல்லைக்குட்பட்டது. ஆனால் தேவை அளவு மிக அதிகமாகும். இதனால், உலகில் எரியாற்றல் விலை உயர்ந்துவரும் நிலைமையில், எரியாற்றல் துறையில் பல்வேறு கிழக்காசிய நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இப்பிரதேசத்தின் எரியாற்றல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

தற்போது, உலகில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரியாற்றல் நுகர்வு அளவு மிக கூடுதலாக இருக்கும் பிரதேசங்களில் ஒன்றாகக் கிழக்காசியா விளங்குகின்றது. ஆனால், இப்பிரதேசத்தில் எரியாற்றல் சேமிப்பு அளவு மிகவும் எல்லைக்குட்பட்டது. பொதுவாக வெளிநாடுகளின் எரியாற்றலை அது பெரிதும் சார்ந்திருக்கின்றது. எரியாற்றல் மீதான ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் தேவை அளவு, உலகின் மொத்தத் தேவை அளவில் 30 விழுக்காடாகும். ஆனால், அதன் எரியாற்றல் விநியோகம், உலகின் மொத்த விநியோகத்தில் சுமார் 10 விழுக்காடு மட்டுமே என்பதை உலகில் மிகப் பெரிய மேலாண்மை மற்றும் ஆலோசனை நிறுவனமான DELOITTE & TOUCHE அண்மையில் வெளியிட்ட அறிக்கை காட்டியுள்ளது. பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக வளரும் கிழக்காசியா, எரியாற்றல் பற்றாக்குறைப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றது. எரியாற்றல் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது, பல்வேறு கிழக்காசிய நாடுகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாகும்.

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் சென் தேமிங், பொஒ மன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். அவர் கூறியதாவது,

பரஸ்பர நலன் மற்றும் முன்னுரிமை தரும் புதிய எரியாற்றல் பாதுகாப்பு முறைமையை உருவாக்க வேண்டும். இதில் சீனாவும் பங்குகொள்ள வேண்டும். சர்வதேச ஒத்துழைப்பில் மூல வளங்களை இணைந்து தோண்டியெடுப்பது தவிர, மாசற்ற எரியாற்றலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் அதன் பயன்பாட்டுத் திறனை உயர்த்துவது, அரசுகளுக்கிடை இரு தரப்பு மற்றும் பல தரப்பு உடன்படிக்கைகள் முதலியவை பற்றியும் இணைந்து ஆராய்வதும் இதில் இடம்பெற்றுள்ளது என்றார் அவர்.

1 2 3