• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-21 14:44:53    
கிழக்காசிய நாடுகளுக்கு பொஒ ஆசிய மன்றம் விடுத்த வேண்டுகோள்

cri

இது பற்றிய சிறந்த தீர்வு முறையைக் கண்டறியவில்லை என்பதன் காரணமாக, நுகர்வு நாடுகளாகிய நாங்கள் போட்டியிடுகின்றோம். இதன் விளைவாக, எண்ணெய் விலை மென்மேலும் அதிகரித்துவருகிறது. இத்தகைய போட்டி, எரியாற்றல் பாதுகாப்புக்கான சர்வதேச ஒத்துழைப்புக்கு விடுத்த மிக பெரிய சவாலாகும். தற்போது இப்பிரச்சினை சிக்கலானது. மூலவளப் பங்கீட்டில் சிறந்த தெரிவு இருக்கும் என்று நிச்சயித்துக் கூற முடியாது. எடுத்துக்காட்டாக, எரியாற்றல் சந்தையில் தீயப் போட்டி நிகழாமல் தவிர்க்கும் பொருட்டு, நுகர்வு நாடுகள் ஒருமனதுடன் ஒத்துழைக்க வல்ல முறைமை ஒன்று இருந்தால், இத்தகைய முறைமை தற்போதைய முறைமையை விட சிறப்பாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் என்றார் அவர்.

கிழக்காசியாவில் எண்ணெய் விலையை நிதானப்படுத்தும் நிதியம் போன்ற கூட்டணியை நிறுவ வேண்டும். மாற்று எரியாற்றல் போன்ற பெரிய ரக எரியாற்றல் திட்டப்பணிகளைப் பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இது நிதி மற்றும் தொழில் நுட்ப ஆதரவு அளிக்கும். தனியொரு நாடு பெரும் தொகையில் முதலீடு செய்வதினால் ஏற்படும் இடர்பாட்டைக் குறைப்பதற்கு இது துணை புரியும். சிறிய பொருளாதார அளவைக் கொண்ட இதர ஆசிய நாடுகள் இத்தகைய திட்டப்பணிகளில் பங்குகொள்வதற்கும் இது ஊக்கமளிக்கும். இதன் மூலம், ஆசியாவின் எரியாற்றல் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கப்படும்.

சீன கடல் எண்ணெய் நிறுவனத்தின் தலைமை மேலாளர் FU CHENG YU கூறியாதாவது,

புதிய தொழில் நுட்பம், புதிய எரியாற்றல் ஆகியவை பற்றிய ஆராய்ச்சியில், நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, தொழில் நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பாக விரிவடைய வேண்டும். புதிய எரியாற்றல், மாற்று எரியாற்றல், புதுப்பிக்க வல்ல எரியாற்றல் ஆகியவை பற்றிய ஆராய்ச்சியில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இன்றைய முதலீடு, நாளைய விநியோகம் என்று இது பொருட்படும் என்றார் அவர். .


1 2 3