• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-21 14:44:53    
கிழக்காசிய நாடுகளுக்கு பொஒ ஆசிய மன்றம் விடுத்த வேண்டுகோள்

cri

அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகில் 2வது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக சீனா விளங்குகின்றது. அதேவேளை, 3வது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடும் ஆகும். 2001ஆம் ஆண்டு முதல் சர்வதேச எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிக்கும் நிலைமையிலும் சீனத் தேசிய பொருளாதாரம் வேகமாக வளரும் நிலைமையிலும், சீனாவில் எரியாற்றல் விநியோகம் நீண்ட காலமாகப் பற்றாக்குறையாக இருந்துவருகின்றது. இதனால், எண்ணெய் விநியோகத் துண்டிப்பாலும் எண்ணெய் விலையின் பெருமளவு அதிகரிப்பினாலும் ஏற்படும் பாதிப்பைத் தவிர்ப்பதே சீனாவின் எரியாற்றல் பாதுகாப்புக்கான முக்கிய குறிக்கோளாக மாறியுள்ளது.

திடீரென நிகழும் நெருக்கடி நிலைமையைச் சமாளிக்கும் வகையில், நெடுநோக்கு எண்ணெய் சேமிப்புத் திட்டத்தை சீனா வகுக்கும். தற்போதைய உயர்ந்த எண்ணெய் விலையைப் பாதிக்காமல் தவிர்க்கும் பொருட்டு, இத்திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சென் தேமிங் கூறினார். 2010ஆம் ஆண்டுக்குள், சீனாவின் எண்ணெய் சேமிப்பு, 30 நாட்களின் இறக்குமதி அளவுக்குச் சமமாகும். தற்போதைய ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் 90 நாள் எண்ணெய் இறக்குமதி அளவை விட இது பெரிதும் குறைவாகும் என்று அவர் குறிப்பிட்டார். சீனாவில் எண்ணெய் சேமிப்பு அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. முதலாவது தொகுதியாக, 4 எண்ணெய் சேமிப்புத் தளங்களைக் கட்டியமைக்க அது திட்டமிட்டுள்ளது.

உள் நாட்டில் எரியாற்றல் விநியோகப் பற்றாக்குறை நிலைமையில் எரியாற்றல் துறையில் பல்வேறு கிழக்காசிய நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும என்று சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார். எடுத்துக்காட்டாக, சீனாவின் அணு மின் வளர்ச்சித் திட்டத்திற்கிணங்க, 2020ஆம் ஆண்டில் சீனாவின் அணு மின் உற்பத்தி ஆற்றல் 4 கோடி கிலோவாட்டை எட்டும். இது தற்போது இருப்பது போல சுமார் 6 மடங்கு ஆகும். ஆனால், அணு மின் வளர்ச்சியில், அணு மூலப்பொருட்களின் பற்றாக்குறை, அணுக் கழிவுப் பொருட்களைக் கையாளுவதில் அனுபவம் குறைவு முதலிய பிரச்சினைகளைச் சீனா எதிர்நோக்குகின்றது. எனவே, இத்துறையில் கிழக்காசிய நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உடனடியாகத் தேவைப்படுகின்றது. இது குறித்து தென் கொரியாவின் சியோல் அரசுப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் KIM TAI YOO பேசுகையில், பிரதேசத்தின் எண்ணெய் விலை நிதானத்தைப் பேணிக்காக்கும் பொருட்டு, எரியாற்றல் கொள்கை பற்றி கிழக்காசிய நாடுகள் ஒருமைப்பாடான நிலைப்பாட்டையும் குரலையும் உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

1 2 3