2007ஆம் ஆண்டு சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்டதன் 60வது ஆண்டு நிறைவாகும். இப்பிரதேசத்தின் XI LINGUOLE நிர்வாகப் பிரதேசத்தைச் சேர்ந்த DONG WU ZHU MUQIN மாவட்டத்தில் புதிய ஐரோப்பிய-ஆசிய பாதையைக் கட்டியமைப்பது தொடர்பான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
வட சீனாவின் எல்லைப் பிரதேசத்தில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 70 ஆயிரம் ஆகும். இவர்களில் மங்கோலிய இன மக்கள் தொகை, 64.5 விழுக்காடாகும். செழுமையான எழில் மிக்க XI LINGUOLE புல் வெளியின் மையப் பகுதியில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. பரந்து விரிந்த நிலப்பரப்புடைய இவ்விடத்தில் நீர்-புல் வளம் நிறைந்து காணப்படுகின்றது. இது, சீனாவின் முக்கிய கால்நடை வளர்ப்புத் தளமாகும்.
தனிச்சிறப்பு வாய்ந்த நில அமைவினால், எதிர்கால வளர்ச்சியில் DONG WU ZHU MUQIN மாவட்டம் சிறப்பு தகுநிலையைப் பெற்றுள்ளது. இந்நிலைமையில், உள் மங்கோலியாவின் XI LINGUOLE நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாகப் பணியகம், லியௌநிங் மாநிலத்து சிங்சோ நகராட்சி மக்கள் அரசாங்கம், வூசின் நகராட்சி மக்கள் அரசாங்கம், மங்கோலிய மக்கள் குடியரசின் சூஹாபாத்து மாநில அரசு உள்ளிட்ட 6 தரப்புகள் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தன. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், உள் மங்கோலிய நுழைவாயில் அலுவலகம், இருப்புப் பாதை அலுவலகம், சீனச் சர்வதேசப் பிரச்சினை ஆய்வுக் கூடம், சாங்ஹை ஒத்துழைப்பு அமைப்பின் ஆய்வகம், உள் மங்கோலியச் சமூக அறிவியல் கழகம் உள்ளிட்ட வாரியங்களின் தொடர்புடைய தலைவர்கள், நிபுணர்கள், அறிவாளர்கள், மங்கோலிய மக்கள் குடியரசின் 3 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஆக 200க்கும் அதிகமானோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
1 2 3
|