• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-28 09:25:28    
புதிய ஐரோப்பிய-ஆசிய இருப்புப் பாதையின் கட்டுமானம் தொடர்பான கருத்தரங்கு

cri

சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வணிக அலுவலகத் துணைத் தலைவரும் ZUENGADABUQI நுழைவாயில் அலுவலகத் தலைவருமான MENG GUI XI இது பற்றி கூறியதாவது,

பரந்து விரிந்த நிலப்பரப்புடைய XI LINGUOLE நிர்வாகப் பிரதேசத்தில் நிறைய தாதுப்பொருட்கள் புதைந்துகிடக்கின்றன. இவ்விடத்தில் கால்நடை வளர்ப்புப்பொருட்கள் அதிகமானவை. LIAONING மாநிலம் சீனாவின் பழமை வாய்ந்த தொழிற்துறைத் தளம் ஆகும். இங்கு முன்னேறிய சாதனங்களும் தொழில் நுட்பங்களும் வல்லுநர்களும் உள்ளனர். ZUENGADABUQI நுழைவாயிலுக்கு இசைவாக அமையும் மங்கோலிய மக்கள் குடியரசின் 3 மாநிலங்களில் மூலவளங்கள் அதிக அளவில் உள்ளன. பல்வேறு தரப்புகளின் முயற்சிகள் மூலம், புதிய ஐரோப்பிய-ஆசிய பாதை கட்டிமுடிக்கப்பட்ட பின்னர், பல்வேறு தரப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், வெளிநாடுகளுடன் தொடர்பை வலுப்படுத்துவதற்கும் இது துணை புரியும் என்பது உறுதி என்றார் அவர்.

மங்கோலிய மக்கள் குடியரசின் சுஹாபாது மாநிலம், கிழக்கு மாநிலம், கன்ட் மாநிலம் ஆகியவற்றின் அரசு அதிகாரிகளும் இக்கருத்தரங்கில் உரை நிகழ்த்தினர். கிழக்கு மாநிலத்தின் நிர்வாக அதிகாரி CE ZHAN LABU கூறியதாவது,

கிழக்கு மாநிலம், மங்கோலிய மக்கள் குடியரசின் கிழக்கு பிரதேசத்தில், முக்கிய பகுதியாகும். QIAOBASHAN- ZUENGADABUQI திட்டப்பணியின் நடைமுறையாக்கத்தினால், மங்கோலிய மக்கள் குடியரசுக்கு வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்ளும் நுழைவாயில் உருவாகும். அத்துடன், மங்கோலியாவுக்கும் சீனாவுக்குமிடையிலான பன்முக ஒத்துழைப்பு மேம்படுவதற்கும் மேலும் அதிகமான வாய்ப்புகள் உருவாகும். இது மட்டுமல்ல, மங்கோலியாவின் கிழக்கு பகுதியில் குறிப்பாக கிழக்கு மாநிலத்தில் ஏற்கெனவே பயனபடுத்தப்பட்டுள்ள WULAN துத்த நாகம், XIANGLONG துத்த நாகம் உள்ளிட்ட பல தாதுப்பொருட்கள், DAQING எண்ணெய் கூட்டு நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இது வசதியான நிலைமையையும் உருவாக்கும் என்றார் அவர்.

ZUENGADABUQ நுழைவாயில் ஆண்டு முழுவதும் வெளிநாடுகளுக்குத் திறந்துவிடப்படுவது, XINQIU-ZUENGADABUQI இருப்புப்பாதை, QIAOBASHAN- ZUENGADABUQI இருப்புப் பாதை ஆகியவற்றின் கட்டுமானம் ஆகியவை, DONG WU மாவட்டம், அதன் நெடுகிலும் அமைந்துள்ள பல்வேறு இடங்கள், மங்கோலியாவின் கிழக்கு பகுதியிலுள்ள 3 மாநிலங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்குத் துணை புரியும். மேலும் சீனா, மங்கோலியா, ரஷியா ஆகிய 3 நாடுகளுக்கிடை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக உறவையும் வட கிழக்காசிய மண்டலப் பொருளாதார ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கும் துணை புரியும். பரஸ்பரம் முன்னுரிமை வழங்கி இணைந்து வெற்றி பெறுவதற்கும் இது ஆழ்ந்த வரலாற்றுச் செல்வாக்கை ஏற்படுத்தும்.

 


1 2 3