DONG WU ZHU MUQIN மாவட்டக் கட்சிக் கமிட்டியின் செயலாளர் WU LI JI இதில் உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது,
சீனாவின் ZUENGADABUQI நுழைவாயிலும் மங்கோலிய மக்கள் குடியரசின் BIQIGETU நுழைவாயிலும் ஆண்டு முழுவதும் வெளிநாடுகளுக்குத் திறந்துவிடப்படுவதுடன், புதிய ஐரோப்பிய-ஆசிய பாதையும் போக்குவரத்துக்குத் திறந்துவைக்கப்படும். ZUENGADABUQI நுழைவாயிலும் MAN ZHOU LI, ER LIAN HAOTE ஆகியவற்றுக்கு அடுத்ததாக, சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் மற்றொரு வழியாக விளங்கும். சீனா, மங்கோலியா, ரஷியா ஆகிய 3 நாடுகளின் பொருளாதார-வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் பல்வேறு துறைகளில் அவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் இது முக்கியத்துவம் வாய்ந்தது. ZUENGADABUQI நுழைவாயிலும் மங்கோலிய மக்கள் குடியரசின் BIQIGETU நுழைவாயிலும் ஆண்டு முழுவதும் வெளிநாடுகளுக்குத் திறந்துவிடப்படும் என்பது பற்றி பிரச்சாரம் செய்து, புதிய ஐரோப்பிய-ஆசிய பாதையின் கட்டுமானத்தை விரைவுபடுத்துதல், அதன் மூலம் மண்டலப் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நுழைவாயில் பொருளாதாரத்தைச் செழுமைப்படுத்தி வளர்ச்சியுறச்செய்தல், இதுவே புதிய ஐரோப்பிய-ஆசிய இருப்புப் பாதையின் கட்டுமானம் பற்றிய கருத்தரங்கு நடைபெறுவதன் நோக்கம் ஆகும் என்றார் அவர்.
இப்புதிய இருப்புப் பாதையை எவ்வாறு கட்டியமைப்பது என்பது பற்றி இதில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஆராய்ந்தனர். இவ்வாண்டின் முற்பாதியில் இக்கட்டுமானப் பணி துவங்குமென திட்டமிடப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் இந்த இருப்புப் பாதை போக்குவரத்துக்குத் திறந்துவிடப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. இது தான் XINQIU-ZUENGADABUQI-QIAOBASHAN இருப்புப் பாதை. அதாவது, சீனாவின் LIAONING மாநிலத்தின் XINQIUவில் தொடங்கி ZUENGADABUQI நுழைவாயில் வழியாக மங்கோலியாவின் QIAOBASHANக்கு செல்லும் இருப்புப் பாதை இது.
1 2 3
|