பொருளாதாரம் வேகமாக வளரும் நகரங்களுடன் ஒப்பிடுகையில், சீனாவின் கிராமங்களில் நிதிச் சேவை நிலை தாழ்ந்த நிலையில் இருந்துவருகின்றது. இதன் விளைவாக, கிராமங்களில் வளர்ச்சிக்கான நிதி பற்றாக்குறையாக உள்ளது. இதனால், கிராம நிதிச் சீர்திருத்த வளர்ச்சியை வேகப்படுத்தி, கிராம நிதி முறைமையை மேம்படுத்துவது என்பது, இவ்வாண்டுக்கான சீனப் பொருளாதாரப் பணியின் முக்கிய உள்ளடக்கங்களில் ஒன்றாகும்.
கிராமங்களில் பெரிய வணிக வங்கிகளின் கிளைகள் மிகவும் குறைவாக உள்ளன. தற்போது நாட்டின் 4 முக்கிய அரசு வணிக வங்கிகளில் ஏனைய 3 வங்கிகளும் கிராமங்களில் சீன வேளாண் வங்கி தவிர, அலுவல் நடத்தவில்லை. கிராமங்களில் வளர்ச்சிக்கான நிதி குறைவு. மேலும், சீனாவின் வேளாண் காப்பீட்டு வகையும் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது. அதன் பரவல் அளவும் விரிவாக்கப்பட வேண்டியுள்ளது. சீனாவின் கிராம நிதி முறைமை பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு இவை காரணமாகும்.
மொத்த மூலதனத் தொகை 4 லட்சம் கோடி யுவானைத் தாண்டிய சீன வேளாண் வங்கியைப் பன்முகங்களிலும் சீர்த்திருத்த வேண்டும். சீர்திருத்தப்பட்ட வேளாண் வங்கி, கிராம மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு ஆதரவளித்து, நிதிச் சேவை நிலையை உயர்த்துவதை அதன் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
வேளாண் வங்கியின் சீர்திருத்தம் மூலம், சீனாவின் கிராமங்களுக்கு மேலும் அதிகமான நிதியுதவி வழங்கப்படும் என்று பெய்ச்சிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சீனப் பொருளாதார ஆய்வு மையத்தின் தலைவரான பேராசிரியர் லின்யிவ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, சீன வங்கி, சீனத் தொழில் மற்றும் வணிக வங்கி, சீனக் கட்டுமான வங்கி ஆகியவை, நகரங்கள் மற்றும் தொழிற்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பதை முக்கியமாகக் கொள்ளும் வங்கிகளாகும். கிராமங்களில் வேளாண்மை, கிராமம், விவசாயி ஆகியோருக்குச் சேவை புரியும் பெரிய வங்கி இருப்பதும் இன்றியமையாதது என்றார் அவர்.
1 2 3
|