• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-04 13:48:08    
கிராம நிதி முறைமையை மேம்படுத்துவதில் சீனாவின் முயற்சி

cri

இது தவிர, காப்பீட்டுத் துறை, சீனாவின் கிராமங்களுக்குச் சேவை புரியும் நிதித் திட்டப்பணியாகும். கடந்த ஆண்டில் சீனக் காப்பீட்டுத் துறை, வேளாண்மை, கிராமம் மற்றும் விவசாயிகளுக்கு 7330 கோடி யுவான் இடர்பாட்டுக் காப்புத் தொகை வழங்கியது.

வேளாண் காப்பீட்டுத் துறையை ஊக்கத்துடன் வளர்ச்சியுறச் செய்து, கிராமக் காப்பீட்டு நிறுவங்களுக்கான கொள்கை ஆதரவை வலுப்படுத்தி, வேளாண் உற்பத்தி மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தனிச்சிறப்புக்கு ஏற்ப, புதிய காப்பீட்டு வகைகளை முன்வைக்க வேண்டும் என்று அண்மையில் நிறைவடைந்த சீனத் தேசிய நிதிப் பணிக் கூட்டம் கோரியுள்ளது. சீனக் காப்பீட்டுக் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் வூதின்வு கூறியதாவது,

கிராமம், வேளாண்மை, விவசாயி ஆகியோருக்கான காப்பீட்டுத் துறையை வளர்ச்சியுறச் செய்வதை இவ்வாண்டின் முக்கிய பணியாகக் கொள்ள வேண்டும். இதில் 3 உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று, தொடர்புடைய கொள்கை மற்றும் நடவடிக்கைகள் வெளியிடப்படுவதை ஆக்கப்பூர்வமாகத் தூண்டி, தொடர்புடைய வாரியங்களுடன் இணைந்து, கொள்கை ரீதியான வேளாண் காப்பீட்டுச் சட்டமியற்றல் பணியை மேற்கொள்வது. இரண்டு, இயற்கைச் சீற்ற இடர்பாட்டைத் தணிவுபடுத்த, கடும் இயற்கைச் சீற்றங்களைச் சமாளிப்பதற்கான வேளாண் காப்பீட்டு நிதிமுறைமையை நிறுவுவது. மூன்று, விவசாயிகளின் தேவை மற்றும் கோரிக்கைக்கிணங்க, காப்பீட்டு அலுவல் வகையை அதிகரித்து, சேவைப் புத்தாக்கத்தை வலுப்படுத்துவதிலும் முதுமைக் காலக் காப்பீடு, உடல் நலம், எதிர்பாராத விபத்து நிகழ்வது ஆகியவற்றில் விவசாயிகளின் காப்பீட்டுத் தேவையை நிறைவு செய்வதிலும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஊக்கமளித்து வழிக்காட்டுவது என்பனவாகும் என்றார் அவர்.

வேளாண் மற்றும் கிராமப் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதிலும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதிலும் கிராம நிதி முறைமை முக்கிய தகுநிலை வகித்துச் சிறப்பு பங்கை ஆற்றியுள்ளது. இதனால், சீன அரசு அண்மையில் வெளியிட்ட கிராம நிதிக்கான ஆதரவுக் கொள்கையை சீன நிதியியல் நிபுணர்கள் பாராட்டியுள்ளனர்.


1 2 3