ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரன்மின்பி யுவான் சேமிப்புத் தொகையைக் கொண்ட அஞ்சல் வங்கியின் சீர்திருத்தம், சீன வேளாண் வங்கியுடன் ஒரே நேரத்தில் நடைபெறுவதாகத் தெரிகிறது. சீன அரசுத் திட்டத்திற்கிணங்க, அஞ்சல் வங்கி, அதன் கிளைகள் நாட்டின் நகரங்கள், கிராமங்கள் எங்கும் பரவிக் கிடப்பதென்ற மேம்பாட்டைப் பயன்படுத்தி,சீன வேளாண் வங்கியுடன் இணைந்து, கிராமங்களிலுள்ள பல்வேறு அடிப்படை வசதிகளின் கட்டுமானத்துக்கு நிதியுதவியளிக்கும். அத்துடன், விவசாயிகளுக்குத் தரமான நிதிச் சேவையும் வழங்கும்.
கிராம வளர்ச்சிக்கென சேவை புரியும் பெரிய வணிக வங்கி தவிர, சந்தையில் நுழையும் வரையறையைச் சீனா தொடர்ந்து தளர்த்தி கிராமங்களில் கிளைகளை நிறுவ அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கும் அரசு சாரா மூலதனத்துக்கும் ஊக்கமும் அளித்துள்ளது. மாவட்ட நிலை நிர்வாகப் பிரதேசங்களில் விவசாயிகளுக்கும் வேளாண் உற்பத்திக்கும் நிதிச் சேவை வழங்கும் கிராம வங்கியை நிறுவும் போது, பதிவு செய்யப்பட்ட அதன் மூலதனம் குறைந்தது 30 லட்சம் யுவானாக இருக்க வேண்டும். பன்னோக்க அலுவலில் ஈடுபடும் நகர வணிக வங்கி நிறுவப்படும் போது, பதிவு செய்யப்பட்ட அதன் குறைந்தபட்ச மூலதனம் 10 கோடி யுவானாகும் என்று சீன வங்கித் துறையின் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் அண்மையில் வெளியிட்ட புதிய விதிகள் வகுத்துள்ளன.
மேலும் அதிகமான மூலதனம் கிராம நிதிச் சேவைத் துறையில் நுழைவதற்கு வழிகாட்டுவதே அதன் நோக்கமாகும் என்று சீன வங்கித் துறையின் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் லியூ மிங் காங் கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,
கிராமங்களில் முதலீடு மற்றும் கொள்வனவு செய்யுமாறும் கிராமிய வங்கியை நிறுவுமாறும் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கி மூலதனம், தொழில் மூலதனம், அரசு சாரா மூலதனம் ஆகியவற்றுக்குச் சீன அரசு ஆக்கப்பூர்வமாக ஆதரவளித்து வழிகாட்டும். புதிய கிராம வங்கியை நிறுவும் போது பதிவு செய்ய வேண்டிய மூலதனக் கோரிக்கையை(வரையறையை) உரிய முறையில் குறைக்கும். கிராமிய நிதி நிறுவனங்களின் அலுவலுக்கான அனுமதி நிபந்தனை மற்றும் அளவைத் தளர்த்தும், நிதி அலுவல் வகைகளை அதிகரித்து தரமான சேவையை வழங்குமாறு அவற்றை அரசு ஊக்குவிக்கும் என்றார் அவர்.
அதேவேளை, கிராமங்களில் விவசாயிகள் மற்றும் கிராமிய தொழில் நிறுவனங்களுக்கென சேவை புரியும் சிறிய கடன் தொகை வழங்கல் கூட்டு நிறுவனங்களை நிறுவுவதில் அரசு சாரா மூலதனத்துக்குச் சீன வங்கித் துறையின் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை நிறுவனம் ஊக்கமளிக்கின்றது. அத்துடன், கிராமங்களுக்கு மேலும் அதிகமான நிதித் தொகையை வழங்கும் பொருட்டு, மக்களிடையில் கடன் வாங்குவது தொடர்பான வட்டி விகிதக் கொள்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
1 2 3
|