• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-04 16:56:01    
மாத்திரையோ மாத்திரை

cri
மனிதர்களாகிய நமக்குத்தான் எத்தனை விதமான பழக்கங்கள். காலையில் அது இல்லாமல் எந்த வேலையும் ஓடாது என்று சிலர் கூறும் காபி அல்லது தேநீர் தொடங்கி, அதை எடுக்காமலிருந்தால் கை கால்கள் நடுங்கி வேதனையுறும் நிலைக்கு தள்ளும் போதை மருந்துகள் வரை, பல்வேறு பொருட்களுக்கு மக்கள் பழகியிருக்கிறார்கள். மணிக்கொரு முறை புகைபிடிப்பது, பொடி போடுவது என புகையிலையோடு தொடர்புடைய சர்தா பாக்கு, பீடா, கைனி போன்ற நச்சுப்பொருட்கள் இவையும் குறிப்பிடத்தக்கவை. இது மட்டுமா, அரசாங்கம் போட்ட சாலையின் நீள அகலத்தை சரி பார்க்கும் பொறுப்பான குடிமக்களின் வெறுப்பான மதுப்பழக்கம். இந்த பழக்கங்களில் பெரும்பாலனவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதை மருத்துவ உலகம் அறிவியல் ரீதியாகவே அவ்வப்போது உணர்த்திக்கொண்டுதான் இருக்கிறது. இந்த பழக்கங்களை மாற்றச் சொன்னால் பலரால் முடியாத நிலையைக்கூட நாம் காணலாம். காரணம் இவர்கள் இந்த பழக்கங்களுக்கு, அடிமைகளாகியுள்ளனர். ஏங்க தேநீர் குடிப்பதைக்கூடவா போதை மருந்தோடு ஒப்பிட்டு அடிமைத்தனம் என்று சொல்வது ?? சிலருக்கு இப்படியானகேள்விகள் எழக்கூடும். காபி தேநீரை விடுங்கள், நோய் குணமாக உட்கொள்ளும் மாத்திரைகளுக்கு அடிமையானவர்களை பற்றி கேட்டதுண்டா நீங்கள்.

மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாகியுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அறிய முடியாத நிலையை நொந்து அங்கலாய்க்கும் மருத்துவ வல்லுனர்களைக் கேட்டால் தெரியும், இந்த பிரச்சனை எவ்வளவு தீவிரமானது என்று.

உண்மையில் மக்கள் தங்களது உடலில் ஏற்படும் சில சிக்கல்களுக்காக மருத்துவரை பார்க்க செல்கிறார்கள். மருத்துவரும் அவர்களை பரிசோதித்து பார்த்தபின் சில மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுக்கிறார். அவர்களும் அதை வாங்கி உட்கொண்டு, சிக்கல் தீர்ந்ததும் மகிழ்ச்சியடைகின்றனர். அதில் சிக்கல் இல்லை. ஆனால் பல வேளைகளில், நோயின் அறிகுறிகளையே நாம் பெரிதென எண்ணி, அவற்றை தணிவு படுத்தும் மருந்துகளை மருத்துவர் எழுதிக்கொடுக்க, அதை உட்கொண்டு, அறிகுறிகள் நீங்க, பின் மறுபடி வந்தால், மீண்டும் அந்த மாத்திரையை வாங்கி உட்கொண்டு, இப்படி ஒரு குறிப்பிட்ட மருந்துக்கு நாம் நம்மையே அறியாமல் பழகிக்கொள்கிறோம். இதைச் சொல்பவர்கள் மருத்துவ வல்லுனர்கள். ஜெர்மனியில் 14 முதல் 19 லட்சம் பேர் இப்படியாக மருந்து மாத்திரைகளுக்கு அடிமையானவர்களாக உள்ளனர் என்று ஜெர்மன் போதைபழக்க அடிமைத்தன மையம் கூறியுள்ளது. அந்நாட்டில் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையோடு இந்த எண்ணிக்கை சமநிலை வகிக்கிறது.

1 2 3