சீனப் பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக வளர்வதுடன், மக்களின் வருமானமும் பெரிதும் அதிகரித்துள்ளது. இருப்பினும், சீனாவில் ஏழைகளுக்கும் செல்வந்தவர்களுக்குமிடையிலான இடைவெளி பெருகிவரும் நிலைமையும் தோன்றியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, சீனச் சமூகத்தின் பல்வேறு துறையினர்கள் இதில் மிகுந்த கவனம் செலுத்திவருகின்றனர். இந்த இடைவெளிப்பிரச்சினை, சீன அரசு முயற்சியுடன் தீர்க்க வேண்டிய சமூகப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.
1970ஆம் ஆண்டுகளின் இறுதி முதல், சீனாவில் ஏழைகளுக்கும் செல்வந்தவர்களுக்குமிடையிலான இடைவெளியைப் பிரதிபலிக்கும் Gini குணகம் மேல் ஓங்கிவருகின்றது. Gini குணகம் என்பது, உலகில் மக்களின் வருமான பங்கீட்டு வித்தியாசத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு முக்கிய குறியளவு ஆகும். Gini குணகத்தின் மிகக் குறைந்த அளவு பூஜியமாக இருக்கும் போது, வருமான பங்கீடு முற்றிலும் சமச்சீரானது என்பதைக் குறிக்கின்றது. Gini குணகத்தின் மிக பெரிய அளவு ஒன்று என்றால், வருமான பங்கீடு முற்றிலும் சமச்சீரற்றது என்று பொருட்படுகின்றது. உண்மையில் Gini குணகம், பூஜியத்துக்கும் ஒன்றுக்குமிடையில் உள்ளது. உலக வங்கி வழங்கிய புள்ளிவிபரங்களின் படி, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், சீனாவின் Gini குணகம் 0.16 ஆக இருந்தது. ஆனால் 2005ஆம் ஆண்டில் அது 0.47ஐ நெருங்கி, உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வருமான இடைவெளி எச்சரிக்கைக் கோட்டைத் தாண்டியுள்ளது. இந்த 30 ஆண்டுகள், சீனப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்த காலமே ஆகும். சீனாவில் பொருளாதாரம் வேகமாக வளர்வதும் மக்களின் வாழ்க்கை நிலை பெரிதும் உயர்வதுமான நிலைமையில், வறியவர்களுக்கும் செல்வந்தோருக்குமிடையிலான இடைவெளி மென்மேலும் பெருகிவருவதை இது கோடிட்டுக்காட்டியுள்ளது.
சீனாவில் சுமார் 20 விழுக்காட்டினருக்கும் மிக குறைந்த வருமானம் பெறுவோருக்குமிடையில் வருமான இடைவெளி சுமார் 18 மடங்கை எட்டியுள்ளது என்று சீனச் சமூக அறிவியல் கழகம் மதிப்பீடு செய்துள்ளது. இப்பிரச்சினையில் சீன அரசு மிகவும் கவனம் செலுத்தி, இதைத் தீர்ப்பதற்கான வழிமுறையைக் கண்டறியப் பாடுபட்டுவருகின்றது. பெரிய வருமான இடைவெளி, பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் நியாயமற்றத் தன்மையோடு தொடர்புடைய பிரச்சினையும் ஆகும். சமூகச் செல்வத்தின் நியாயமான பங்கீட்டையும் பொருளாதாரத்தின் தொடர வல்ல வளர்ச்சியையும் இது பாதித்துள்ளது.
1 2 3
|