• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-11 11:30:29    
ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்குமிடையிலான இடைவெளியைக் குறைப்பதில் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

cri

சீனாவில் விவசாயிகளின் வருமானம், நகர மக்களின் வருமானத்தை விட குறைவு. இது, பொதுவாக நிலவும் பிரச்சினை ஆகும். நகரங்களிலும் கிராமங்களிலும் நிலவும் வருமான இடைவெளிப் பிரச்சினையைத் தணிவுபடுத்தும் வகையில், 2004ஆம் ஆண்டு சீன அரசு மேலும் அதிகமான பொது நிதித் தொகையைக் கிராமங்களில் பரவல் செய்யத் துவங்கியது. தரமான விதைகளையும் முன்னேறிய வேளாண் இயந்திரங்களையும் வாங்குவதிலும் வருமானத்தை அதிகரிப்பதிலும் விவசாயிகளுக்கு உதவியளிப்பதற்கு இந்நிதித் தொகை பயன்படுத்தப்படுகிறது. இந்நடவடிக்கை, நல்ல பயன் தந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, அரசின் உதவியினால், ZHAI PING கிராம விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகின்றது. மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளது என்று தென் மேற்குச் சீனாவின் ஸ்சுவான் மாநிலத்தைச் சேர்ந்த ZHAI PING கிராம விவசாயி ZHOU MING எமது செய்தியாளரிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

எனக்குச் சுமார் 0.13 ஹெக்டர் மீன் வளர்ப்புக் குளம் உண்டு. மீன் விற்பனை மூலம் ஆண்டுக்கு 5000 ரன்மின்பி யுவான் கிடைக்கும். சுமார் 0.4 ஹெக்டர் நிலத்தில் நெல் பயிரிடுவதன் மூலம் நான்காயிரம்-ஐயாயிரம் யுவான் கிடைக்கும். 4 பன்றிகளை வளர்த்து விற்பனை செய்வதன் மூலம் சுமார் 3000 யுவான் பெறலாம் என்றார் அவர்.

ZHOU MING போன்ற சீன விவசாயிகள் பலரின் வாழ்க்கை நிலை படிப்படியாக நகர மக்களின் நிலையை நெருங்கிவருகின்றது. சில பிரதேசங்களில் விவசாயிகளின் வருமான அதிகரிப்பு, நகரவாசிகளை விட கூடுதலாகும். கடந்த ஆண்டில் சீன விவசாயிகளின் நபர்வாரி ஆண்டு வருமானம் 3587 யுவானை எட்டியது. 2005ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் இது 10 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் வழங்கிய தரவுகள் காட்டியுள்ளன.

இது தவிர, இவ்வாண்டு முதல், சீனாவின் அனைத்து கிராமங்களிலும் கட்டாயக் கல்விக் கட்டத்தில் மாணவர்கள் செலவழிக்க வேண்டிய நூல் கட்டணம் தவிர்த்த ஏனைய அனைத்து கட்டணங்களும் விலக்கப்படும். அத்துடன் அடுத்த 3 ஆண்டுகளில் முழு நாட்டிலும் புதிய ரக கிராம ஒத்துழைப்பு மருத்துவ முறைமை பரவலாக்கப்படும். இந்நடவடிக்கைகளினால், விவசாயிகளின் அன்றாட வாழ்க்கைச் செலவு பெரிதும் குறைந்துவிடும். அவர்கள் மேலும் அதிகமான நலன்களைப் பெறுவர்.

நகர மக்களுக்கும் கிராம மக்களுக்குமிடையிலான வருமான இடைவெளி நிலவுவது தவிர, சீனாவின் நகர மக்களிடையில் நிலவும் வருமான இடைவெளியையும் அலட்சியம் செய்ய முடியாததாகும். நகரங்களில் உள்ள வருமானம் இல்லாத மிகவும் வறிய நிலைக்குள்ளாகிய மக்கள் மீது சீன அரசு மிகவும் கவனம் செலுத்தியுள்ளது.

1 2 3