இவ்வாண்டு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர் YAO RU GENG, வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாநிலத்து CHANG CHUN நகரில் வாழும் ஏழையாவார். ஊனமுற்றவரான அவர் தொழிற்சாலையொன்றில் வேலை செய்துவந்தார். சில ஆண்டுகளுக்கு முன், தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், அவருக்கு வேலை வாய்ப்பு இல்லை. இதனால், வருமானம் இல்லை. இத்தகைய நிலைமையில் அவருடைய வாழ்க்கை எப்படி அமையும்?இது பற்றி அவர் எமது செய்தியாளரிடம் பேசுகையில், மிகக் குறைந்த வாழ்க்கைச் செலவு என்ற முறையில், உள்ளூர் அரசு திங்கள்தோறும் தமக்கு 200 யுவானுக்கு மேற்பட்ட உதவித்தொகையை வழங்குகிறது. அன்றி, வேறு சலுகைகளையும் பெற முடியும் என்று கூறினார்.
சீனத் தேசிய வரி வசூலிப்புப் பணியகத்தின் துணைத் தலைவர் வாங்லி கூறியதாவது,
கடந்த ஆண்டில் தனியார் வருமான வரி வசூலிக்கப்படுவதற்கான வரையறை, திங்கள் ஒன்றுக்கு 1600 யுவானுக்கு மேல் என்று உயர்த்தப்பட்ட பின்னர், சீனாவில் வருமான வரி வசூலிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடி குறைந்தது. இது சமூகத்தின் நியாயத் தன்மையைப் பேணிக்காப்பதற்கும் இணக்கச் சமூகத்தின் உருவாக்கத்தை விரைவுபடுத்துவதற்கும் துணை புரியும் என்றார் அவர்.
வறியவர்களுக்கும் செல்வந்தோருக்குமிடையிலான இடைவெளியைக் குறைக்கச் சீன அரசு பெரும் முயற்சி மேற்கொண்டு குறிப்பிடத்தக்க பயன் பெற்றுள்ளது. எனினும், தற்போதைய சீனச் சமூகப் பொருளாதாரம் சமச்சீரற்ற முறையில் வளர்வதன் காரணமாக, நகரங்களுக்கும் கிராமங்களுக்குமிடையிலும் பிரதேசங்களுக்கிடையிலும் பல்வேறு துறைகளுக்கிடையிலும் வருமான இடைவெளி தொடர்ந்து நிலவுகின்றது. இது பற்றி சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் மாகெய் கூறியதாவது, இனிமேல், வருமானப் பங்கீட்டுச் சரிப்படுத்தல் பணியைச் செவ்வனே மேற்கொள்ள வேண்டும். இதில் மேற்கொள்ளப்பட வேண்டிய சில பொருளாதார மற்றும் சட்ட வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. சமூக உறுதியளிப்பு முறைமையை மேலும் மேம்படுத்தி, நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் வறிய மக்களின் வாழ்க்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவியளிக்க வேண்டும். குறிப்பாக, நகரங்களில் மிகக் குறைந்த வாழ்க்கைச் செலவு அளவு முறைமையில் சேர்ந்துள்ள குடும்பங்கள், கிராமப்புறங்களிலுள்ள வறிய மக்கள் ஆகியோருக்குப் பேருதவியளிக்க வேண்டும் என்றார் அவர். 1 2 3
|