கலை...........வணக்கம் நேயர்களே. கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி.
கிளீட்டஸ்........கலை இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
கலை........மகிழ்ச்சியுடன் எனக்கு உதவும் வகையில் வினாக்கள் நீங்கள் தான் முன்வைக்க வேண்டும்.
கிளீட்டஸ்........நான் நீங்கள் சொன்ன படியே உதவுகின்றேன்.
கலை.......அப்படியிருந்தால் இன்றைய நிகழ்ச்சியை துவக்கலாமா?
கிளீட்டஸ்........ சரி நான் வினா தொடுக்கின்றேன்.
கலை......கேளுங்கள்.
கிளீட்டஸ்........இப்போது ராட்சத பாண்டா என்னும் பொது அறிவு போட்டி நிறைவடையும் கட்டத்தில் இருக்கின்றது. அப்படிதானே.
கலை.......ஆமாம். திட்டத்தின் படி விடைத்தாட்கள் எங்களுக்கு அனுப்பப்படும் கடைசி நாள் ஏப்ரல் 30ம் நாளாகும். ஆகவே மே திங்கள் 20ம் நாளுக்கு பின் வர வேண்டிய விடைதாட்கள் அனைத்தும் வந்து சேர்ந்தன.
கிளீட்டஸ்........இதுவரை எத்தனை விடைதாட்கள் நமது
வானொலிக்கு வந்து சேர்ந்தன.
கலை..........வானொலி நிலையத்தின் புள்ளிவிபரங்களின் படி ராசாட்த பாண்டா என்னும் பொது அறிவு போட்டியில் மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 959 விடைதாட்கள் வந்தன. இதில் நமது தமிழ் பிரிவின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6700 ஆகும்.
கிளீட்டஸ்........இந்த எண்ணிக்கையை பார்த்தால் நமது தமிழ் நேயர்கள் ஆக்கப்பூர்வமாக இப்போட்டியில் பங்கு கொண்டுள்ளனர் என்று புரிகிறது.
1 2 3
|