• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-14 09:12:16    
ஸ்ச்சான் மாநிலத்தின் ராட்சத பாண்டா

cri

கலை.......ஆமாம். இதில் மொத்தம் சுமார் 500 நேயர்கள் பங்கு கொண்டுள்ளனர். ஆனால் நேயர் எண் பெறாதவர்கள் அனுப்பிய விடைத்தாட்களின் எண்ணிக்கை மிக அதிகம். புதியவர்கள் பலரை நமது நேயர்கள் இப்போட்டியில் பங்கேற்க ஊக்கமூட்டியுள்ளனர் என்பதை இது காட்டுகின்றது. இது மிகவும் மகிழ்ச்சியானதாகும். நிறைய மாணவிச் செல்வங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது மேலும் மகிழ்ச்சியான தகவல். பங்கு கொண்ட நேயர்கள் முக்கியமாக ஆரணி, திருச்சி, சேலம், வேலூர், ஈரோடு, மதுரை, மட்டக்களப்பு, காத்தான்குடி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கிளீட்டஸ்.........அப்படி சென்றால் இந்த முறை பொது அறிவு போட்டியில் மற்ற இடங்களில் வாழ்கின்ற நேயர்கள் அவ்வளவாக பங்கெடுக்க வில்லை. இந்த மனக்குறையை அடுத்த முறை பொது அறிவு போட்டியில் காண எமக்கு விருப்பமில்லை. 

கலை.........நீங்கள் சொன்னது முற்றும் சரியானது. பல்வேறு இடங்களில் வாழ்கின்ற நேயர்கள் பொது அறிவு போட்டியில் பங்கு பெற வேண்டும். கூட்டு நடவடிக்கையில் நேயர்கள் அனைவரும் ஈடுபட வேண்டும். இத்தகைய நேரத்தில் நமது சேவைப் பணியின் முக்கியத்துவம் வெளிகாட்டப்படும். அல்லவா.

கிளீட்டஸ்......ஆமாம். நண்பர்கள் எல்லோரும் கூட்டு நடவடிக்கையில் கலந்து கொண்டால் நாங்கள் செயல்படுத்தும் வேலை முக்கியத்துவம் வாய்ந்தது.

கலை........ஆகவே. நேயர்களுக்குச் சேவைபுரியும் வேலையில் காணப்பட்ட குறையை நீக்க வேண்டும். முடிந்த அளவில் நேயர்கள் அனுப்பிய விடைதாட்கள் அனைத்தையும் கணிணி மூலம் பதிவு செய்ய வேண்டும். கடைசியில் கணக்கி மூலம் தொகுக்கும் பணி எளிமையானது.

1 2 3