கிளீ..........கலை நீங்கள் சொன்னது சரிதான். சாதாரண நாட்களில் நமது வேலை வழமையாக நீங்கள் குறிபிட்ட விதியின் படியே நிறைவேற்றப்படுகின்றது. அல்லவா.
கலை........ஆமாம். நேயர்களின் முயற்சிகளுக்கு போதியளவில் மதிப்பு அளிக்கும் நோக்கத்துடன் கடிதங்களைக் கையாள்கின்றோம். நீங்கள் பாருங்கள். சாதாரண நாட்களில் ஒவ்வொரு கடிதத்தை கையாளும் போதும் கடிதம் வந்த நாளை விட குறைந்தது 20 நாட்கள் தாமதமாக இருக்கும். கடிதங்களை கையாளும் அலுவலகத்திலிருந்து நமது பிரிவுக்கான கடிதங்களை பெற்ற பின், பகுதி பகுதியாக பிரித்து கையாள வேண்டும். இது இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆகவே சில சமயங்களில் ஒருவர் அனுப்பிய 3, அல்லது 5 கடிதங்களை ஓரேநேரத்தில் கையாண்டு அவருக்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பும் சூழ்நிலை உருவாயிற்று.
1 2 3
|