• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-18 14:43:40    
சம விகித வருமான வரி குறித்த சீன மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் கருத்துக்கள்

cri

மார்ச் திங்களில் நிறைவடைந்த சீனத் தேசிய மக்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில், தொழில் நிறுவனங்களின் வருமான வரி பற்றிய புதிய சட்டம், அதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சம விகித வருமான வரியை இச்சட்டம் வகுத்துள்ளது. புதிய வரி விகிதம் 25 விழுக்காடு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனாவிலுள்ள வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவரும் முன்னுரிமையுடன் கூடிய வரி வசூலிப்பு உரிமை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன், சந்தையில் சீனத் தொழில் நிறுவனங்களுக்கு மேலும் நியாயமான சந்தைப் போட்டிச் சூழ்நிலையை இது ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு முதல், இப்புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்.

அண்டை நாடான ஜப்பான், வெளிநாட்டு முதலீட்டைச் சீனா உட்புகுத்துவதில் 2வது முக்கிய நாடாகும். இதுவரை, சீனாவிலான ஜப்பானின் முதலீட்டுத் தொகை சுமார் 6000 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. மிகப் பெரும்பாலான ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் சீனாவில் உற்பத்தித் தளங்களை நிறுவியுள்ளன. OMRON தொழில் நிறுவனம் அவற்றில் ஒன்றாகும். உலகில் புகழ் பெற்ற தானியங்கி கட்டுப்பாட்டு மற்றும் மின்னணுச் சாதானத் தயாரிப்புத் தொழில் நிறுவனமான OMRON 1980ஆம் ஆண்டுகளில் சீனாவில் நுழைந்தது. 2002ஆம் ஆண்டில் சீனாவில் அதன் தலைமை அலுவலகம் நிறுவப்பட்டது. சீனாவிலுள்ள அதன் முதலீட்டுத் தொகை பல பத்து கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.

சீனா வகுத்த தொழில் நிறுவனங்களின் வருமான வரி பற்றிய புதிய சட்டம், வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு எதிரானது அல்ல. மேலும் நியாயமாகப் போட்டியிடும் சந்தைச் சூழ்நிலையை உருவாக்குவதே அதன் நோக்கம் ஆகும் என்று OMRON சீனத் தொழில் நிறுவனத்தின் தலைமை மேலாளர் yamashita toshio சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறியதாவது,

உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த பின்னர், சீனா சந்தையை மேலும் அகலத் திறந்துவைத்துள்ளதோடு, மென்மேலும் அதிகமான துறைகளில் சர்வதேசப் பொது விதிகளுக்கிணங்கச் செயல்பட்டுவருகின்றது. உலகிலுள்ள அனைத்து சிறந்த தொழில் நிறுவனங்களும் சீனாவில் போட்டியிட விரும்புகின்றன. அனைத்து தொழில் நிறுவனங்களும் நியாயமான சூழலில் போட்டியிடுவதைக் காண விரும்புகின்றோம்.

1 2 3