• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-18 14:43:40    
சம விகித வருமான வரி குறித்த சீன மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் கருத்துக்கள்

cri

வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, புதிய வரி வசூலிப்பு முறைமை மீது உள் நாட்டுத் தொழில் நிறுவனங்கள் பேரார்வம் காட்டியுள்ளன.

உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் மீதான சம விகித வருமான வரியை வசூலிக்கும் முறைமையை நடைமுறைப்படுத்துவது என்பது பொது வளர்ச்சிப் போக்காகும் என்று சீனாவின் பிரபல வீட்டுப் பயன்பாட்டு மின் சாதனத் தயாரிப்புத் தொழில் நிறுவனமான T C L குழுமத்தின் தலைவர் லீ துங் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது,

இப்புதிய வரி வசூலிப்பு முறைமை மிகவும் பொருத்தமானது. இது பற்றி பல ஆண்டுகளாகக் கோரப்பட்டது. தற்போது சீனப் பொருளாதார வளர்ச்சி ஒப்பீட்டளவில் உயர் நிலையை எட்டியுள்ளது. உலக வர்த்தக அமைப்பில் சீனா சேர்ந்த பிறகு, சீனச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் நுழைவதை அனுமதிப்பது மற்றும் கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடைய விதிகள் பல நீக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய சட்ட முறைமை நியாயமானது என கருதுகின்றேன் என்றார் அவர். முன்பு, உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் மீது வேறுபட்ட வரி வசூலிப்பு முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டமை நியாயமானது. ஏனெனில், சீனச் சந்தையில் நுழையுமாறு பல வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களை அது ஊக்குவித்தது. தற்போதைய புதிய வரி வசூலிப்பு முறைமையும் நியாயமானது. ஏனெனில், சீனா வெளிநாட்டு முதலீட்டைப் பயன்படுத்துவதை இது முன்னேற்றியுள்ளது என்று தொழில் நிறுவனங்களின் வருமான வரி பற்றிய புதிய சட்டம் அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் சீன வணிக அமைச்சர் BAO XI LAI கூறினார். இப்புதிய சட்டப்படி, முன்பு முன்னுரிமையைக் கொண்ட வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வட்டி விகிதத்தை அனுபவிக்கும் 5 ஆண்டு கால அவகாசம் கிடைக்கும். அத்துடன், புதிய உயரிய தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் முதலீடு செய்த வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கும் முன்னுரிமையுடன் கூடிய வரி விகிதக் கொள்கை வழங்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


1 2 3