• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-18 14:43:40    
சம விகித வருமான வரி குறித்த சீன மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களின் கருத்துக்கள்

cri
சீனச் சந்தைக்குத் தேவைப்படும் பொருட்களை ஆராய்ந்து உற்பத்தி செய்வது என்பதே சந்தையில் ஊன்றி நிற்பதற்கான ஆதாரமாகும். இதனால், சீன மற்றும் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு உகந்த சம விகித வருமான வரி வசூலிப்பு என்பது, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என நான் கருதவில்லை ன்றார் அவர்.

ஜப்பானியத் தொழில் நிறுவனங்களைப் போல, சீனாவின் முதலாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழில் நிறுவனங்களின் முதலீட்டுத் தொகையும் கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்துவருகின்றது. கடந்த ஆண்டில், சீனாவிலான அவற்றின் முதலீட்டுத் திட்டப்பணிகளின் எண்ணிக்கை 2700ஐத் தாண்டியுள்ளது. உடன்படிக்கைகளிலான முதலீட்டுத் தொகை சுமார் ஆயிரம் கோடி அமெரிக்க டாலராகும். 92 விழுக்காட்டு ஐரோப்பியத் தொழில் நிறுவனங்கள் சீனாவிலுள்ள தத்தமது அலுவல் மீது நம்பிக்கை கொண்டுள்ளன என்பதை சீன-ஐரோப்பிய ஒன்றிய வணிகச் சங்கம் அண்மையில் மேற்கொண்ட புதிய கள ஆய்வின் முடிவு காட்டியுள்ளது.

ஐரோப்பிய தொழில் நிறுவனங்களைப் பொறுத்த வரை, சீனச் சந்தை வலிமை மிக்க ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்ததாக அமைந்ததற்கு முன்னுரிமையுடன் கூடிய வரி வசூலிப்புக் கொள்கை மட்டும் காரணம் அல்ல என்று பெய்ச்சிங்கிலுள்ள இத்தாலிய வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சிச் சங்கத்தின் தலைமைப் பிரதிநிதி லெஸ்பிங் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

தற்போது சீனப் பொருளாதார முறைமை, ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்ததாக அமைந்துள்ளமைக்கு வரி வசூலிப்பு மட்டும் காரணம் அல்ல. வேறு காரணங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, மேம்பாடான உழைப்பு ஆற்றல், அதாவது, சீனாவில் உயர் கல்வி அறிவு பெற்ற உழைப்பாளர்கள் உள்ளனர். அவர்களுடைய உழைப்பு விலை மலிவு. தவிர, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட துறைகளில் முன்பை விட மேலும் சிறந்த முதலீட்டு வசதிகளைச் சீனா உருவாக்கலாம். இதனால், வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களைப் பொறுத்த வரை, சீனாவில் முதலீடு செய்து தொழிற்சாலைகளைக் கட்டியமைப்பது என்பது, சந்தை நிலைமைக்கேற்ற தெரிவு ஆகும். மேலும் முக்கியமானது என்னவென்றால், சீனாவில் அவை மாபெரும் சந்தையைப் பெறலாம் என்பது ஆகும் என்றார் அவர்.

1 2 3