• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-06-25 15:42:22    
 சீன ரூய் அன்னின் கிராமப்புற ஒத்துழைப்புச் சங்கம்

cri

நிதித் துறையின் வளர்ச்சி பின்தங்கிய நிலையில் இருப்பது, சீன கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்ற ஒரு பெரிய பிரச்சினையாகும். ஆனால் zhejiang மாநிலத்தின் rui an நகரத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, இனிமேல் நிதித் திரட்டல், சிரமமாக இருக்காது. ஏனென்றால் வேளாண் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட, கிராமப்புற ஒத்துழைப்புச் சங்கங்களிலிருந்து சிறு தொகையையும், குறைவான வட்டி கொண்ட கடன்களையும் அவர்கள் பெற முடியும்.

Zhejiang மாநிலத்தின் rui an நகரத்தின் zhu ao di கிராமத்தில் சுமார் 40 வயதான zhu ying di என்பவர், தனது முற்றத்தில் துடைப்பத்தைப் பின்னிக் கொண்டிருந்தார். சுற்றுப்புறம் எங்கும் பின்னல்வேலைப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. வசதியான பயனுள்ள கடன் சேவை குறித்து பேசும் போது அவர் முகம் மலர்ந்தார். அவர் கூறியதாவது: நிதிச் சுழற்சி செவ்வனே நடைபெறுவதால் மூலப்பொருட்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

முன்பு சிறிய அளவில் வணிகம் செய்தேன். இப்போது அது குறிப்பிட்டத்தக்க அளவில் நடைபெறுகிறது. இதோ எனது மூங்கில் பின்னல்களைப் பாருங்கள். அவை 20 ஆயிரத்துக்கு மேல் உள்ளன. இவ்வாறு செய்தால் உற்பத்திச் செலவு குறையும். திங்கள் வருமானம் சுமார் ஐநூறு அறுநூறு யுவானை அதிகரிப்பது, மிக எளிது என்று அவர் கூறினார். Zhu ao di கிராமம், புகழ் பெற்ற துடைப்பத் தயாரிப்பு கிராமமாகும். இதில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்கின்றனய அவற்றில் பாதிக்கு மேற்பட்ட குடும்பங்கள், துடைப்பங்களைப் தயாரிப்பதன் மூலம் வாழ்க்கை நடத்துகின்றன. இப்பொழுது நாங்கள் கிராமப்புற ஒத்துழைப்புச் சங்கத்தில் கலந்து கொண்டதால் கடன் பெறுவது எளிதானது. செயல்முறை எளிதானது மட்டுமல்ல, வட்டிவிகிதமும் முன்பை விட சற்று குறைவானது. கிராமப்புற ஒத்துழைப்புச் சங்கத்தில் கிராம நம்பிக்கை கூட்டுறவு அமைப்பு, வினியோக மற்றும் விற்பனை கூட்டுறவு அமைப்பு, சிறப்பு கூட்டுறவு அமைப்பு ஆகியவை அடங்கும்.

1 2 3