இம்மூன்று கூட்டுறவு அமைப்புகளும் விவசாயிகளுக்குத் தனித்தனியே மூலதனம், சந்தை விற்பனை, தொழில்நுட்ப வழிகாட்டல் முதலிய சேவைகளை வழங்குகின்றன. இந்தக் கிராமப்புற ஒத்துழைப்புச் சங்கம் ruian பிரதேசத்திலான முதலாவது கிராமப்புற ஒத்துழைப்பு வங்கி போன்ற நிலுவனமாகும். விவசாயிகள் கடன் பெறுவதற்கு இது ஒரு வசதியான வழிமுறையை அளிக்கிறது என்று rui an நகராட்சியின் துமைத் தலைவர் chen lin குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
கிராமப்புற ஒத்துழைப்புச்சங்கம், வங்கி அல்ல. அது வங்கிக்கு இசைவான ஒரு அமைப்பு முறையாகும். விவசாயிகளைப் பொறுத்தவரை, இதில் கலந்து கொள்வது, மேலும் பயனுள்ள, வசதியான நிதிச் சேவையைப் பெறுவதற்கான ஒரு விரைவு வழியாகும். கடந்த ஆண்டு, கிராமப்புற ஒத்துழைப்புச் சங்கம் நிறுவப்பட்ட பின்பு, நிதியைப் பற்றி எப்பொழுதும் கலைப்படுகின்ற விவசாயி ZHU YING DI, துடைப்ப பின்னல் வேலையில் ஈடுபடும் இதர குடும்பங்களுடன் சிறப்புக் குழுவை உருவாக்கியுள்ளார். இக்குழுவின் உறுப்பினருக்கு நிதி தேவைப்படும் போது, பிற உறுப்பினர்கள் இணைந்து அவரது உத்தரவாதியாகச் செயல்படுவார்கள். இதன் மூலம் அவர்கள் கடன் பெறலாம். கிராமப்புற கூட்டுறவு வங்கி, அவர்களுக்கு நன்மை கொண்டு வந்திருப்பது உண்மை தான் என்று அவர் கூறினார்.
கடன் பெறுவதில் நன்மை அதிகம் தான். எடுத்துக்காட்டாக, கூட்டுறவு கடன் அமைப்பு, ஓராண்டில் ஏறக்குறைய 10 லட்சக்கணக்கான யுவான் கடன் தருகிறது. வட்டி விகிதத்தின் படி, விவசாயிகளுக்கு பல சலுகைகள் கிடைத்துள்ளன. ஒரு கிராமம் பல பத்தாயிரம் யுவான் வட்டியை குறைவாக செலுத்துவது. இச்சலுகைகளில் ஒன்றாகும். ஒரு கிராம் சுமார் பல பத்தாயிரம் யுவான் கடன் பெற்றுள்ளது. இதனால் விவாசாயிகள் பயனடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
1 2 3
|