இது தனக்குப் பெரும் உதவி அளிக்கின்றது என்று சங்கத்தில் சேர்ந்த இன்னொரு விவாசாயி LVXINGCAI கூறினார். அவர் கூறியதாவது.
இச்சங்கத்தில் நிச்சயமாகச் சேர வேண்டும். வீட்டில் அதிகமான துடைப்பங்களை முடைந்தால், வட்டி விகிதம் குறைவாக இருந்தால், இது நம் கிராமவாசிகளுக்குப் பயன் விளைவிக்கும் என்றார்.
அனைவருக்கும் தெரிந்தவாறு, வங்காளத்தேசத்தில் MUHAMMAD YUNUS என்பவர், ஊரக வங்கியை அமைத்தார். இந்த வங்கி, ஏழைகளுக்கு உதவி செய்வதை, அதன் கடமையாகக் கருதுகிறது என்ற போதிலும், துண்டு விழவில்லை. இதே போல, RUIAN கிராம ஒத்துழைப்பு வங்கி, கிராப்புற ஒத்துழைப்புச் சங்கம் மூலம் விவாசாயிகளுக்கு சிறு தொகை கடன் வழங்குகிறது. இதன் விளைவாக, விவாசாயிகளுக்கு மூலதனம் கிடைக்கிறது. இதனால், வங்கியும் இடர்ப்பாட்டைக் கட்டுப்படுத்தி, லாபத்தைப் பெறுகின்றது. உண்மையில் வங்கியும் விவாசாயிகளும் கூட்டாக நன்மை பெற்றுள்ளனர்.
RUIAN கிராப்புற ஒத்துழைப்புச் சங்கத்தின் அலுவலக இயக்குனர் LINZHIYIN செய்தியாளருக்குப் பேட்டி அளித்தப் போது கூறியதாவது:
இக்கிராமம் பெற்றுள்ள கடன் தொகை அதிகமானது. ஏனென்றால், இது, கூட்டு உத்தரவாதக் குழு என்ற பெயரில் விவாசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் நிதி புழக்கம், திரும்பப்பெறுதல் ஆகியன ஊரக நம்பிக்கை கூட்டுறவு அமைப்பால் கண்காணிக்கப்பட்டுள்ளன. எப்பொழுது கடன் திரும்பிக்கொடுக்கப்படும் என்பது பற்றிய தகவலை இவ்வமைப்பு வழங்க முடியும். இது நிதி துறை இடர்ப்பாடுகளை மிகக் குறைவான அளவுக்கு கட்டுப்படுத்துவதற்கு சமம் என்றார் அவர்.
RUIAN இன் கிராப்புற நம்பிக்கைக் கூட்டுறவு சங்கம், சீனாவின் கிராமப் புறங்களில் நிதி துறைச் சீரதிருத்தம் நடைபெறும் முதலாவது சோதனைப் பிரிவாகும். இச்சீர்திருத்தம், விவாசாயிகளால் வரவேற்கப்பட்டுள்ளது. நிபுணர்கள் அறிவாளர்கள் பலர், இதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். நகர மற்றும் மாவட்ட நிலையில், கிராமப்புற ஒத்துழைப்புச் சங்கத்தைக் கட்டியமைப்பது, மிகவும் முக்கியமான ஒரு முயற்சியாகும். இத்துறையில், RUIAN மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிலைமை பக்குவம் அடையும் போது, இந்த மாதிரி, நாடு அளவில் பரவலாக்கப்பட வேண்டும் என்று ஊரகப் பிரச்சினையை ஆராயும் சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் வல்லுநர் WENTIEJUN கூறினார். 1 2 3
|