• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-02 11:21:42    
ஹாங்காங்கிற்கும் சீன பெருநிலப்பகுதிக்குமிடையிலான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு

cri

சீனாவின் ஹாங்காங், உலகில் புகழ் பெற்ற நிதி, வர்த்தக மற்றும் கப்பல் போக்குவரத்து மையமாகும். தகவல், தொழில் நுட்பம், நிதி ஆகிய துறைகளில் அது வலிமை வாய்ந்த போட்டி ஆற்றலைக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியில் ஹாங்காங்கும் சீன பெருநிலப்பகுதியும் ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்யலாம். அவற்றின் ஒத்துழைப்புக்குச் சிறந்த அடிப்படை உண்டு. ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய கடந்த 10 ஆண்டுகளில் அதற்கும் சீனப் பெருநிலப்பகுதிக்குமிடையிலான பொருளாதார-வர்த்தக ஒத்துழைப்பு வலுப்பட்டுவருகின்றது.

சீன பெருநிலப்பகுதியைச் சேர்ந்த ஜியாங்சி, ஹுபெய், குவெய்சோ ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அண்மையில் ஹாங்காங்கில் நடத்திய முதலீட்டு ஈர்ப்புக் கூட்டத்தில் ஒத்துழைப்புத் திட்டப்பணிகளை ஹாங்காங் தொழில் முனைவோரிடம் பரிந்துரை செய்தனர். குவெய்சோ மாநிலத்தின் ANSHUN நகரைச் சேர்ந்த முதலீட்டு ஈர்ப்புப் பணியகத்தின் தலைவர் ZHOU WU CHANG எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். ஹாங்காங்கிற்குச் சென்று முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். இப்பயணத்தில், பெரும் வெற்றி பெறப்பட்டுள்ளது. ANSHUN நகரத்துக்கும் ஹாங்காங் தொழில் நிறுவனங்களுக்குமிடையில் 18 திட்டப்பணிகள் இடம்பெறும் ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வுடன்படிக்கைகள், சுற்றுலா வளர்ச்சி, சேவை, போக்குவரத்து, தாதுப்பொருள் அகழ்வு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. அவற்றின் மொத்த மதிப்பு 270 கோடி யுவான் ஆகும் என்று ZHOU WU CHANG கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

இது எங்கள் முதலாவது ஹாங்காங் பயணம். நல்ல துவக்கம் இருந்ததால் மீண்டும் வருவோம். எங்கள் பிரதேசத்தில் அதிகமான மூலவளங்கள் உள்ளன. மின்சார விலை மலிவு. நிலக்கரி உள்ளிட்ட வேறு தாதுப்பொருட்களும் செறிந்துகிடக்கின்றன. தகவல், மூலதனம் தொழில் நுட்பம் ஆகியவற்றில் ஹாங்காங் மேம்பாட்டைக் கொண்டுள்ளது. ஹாங்காங்கிற்கும் சீனப் பெருநிலப்பகுதிக்குமிடையிலான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்யக் கூடியதாக அமையும் என்றார் அவர்.

1 2 3