• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-02 11:21:42    
ஹாங்காங்கிற்கும் சீன பெருநிலப்பகுதிக்குமிடையிலான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு

cri

முதலீட்டு ஈர்ப்புப் பணியகத்தின் தலைவர் ZHOU WU CHANG கூறியது போல, சீனப் பெருநிலப்பகுதியின் பரந்துபட்ட சந்தை, அதிகமான உழைப்பு ஆற்றல் முதலியவை ஹாங்காங் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் அதிகமான வாய்ப்புகளை வழங்கியுள்ளன. ஹாங்காங் தொழில் நிறுவனங்கள் சீன பெருநிலப்பகுதியில் முதலீடு செய்வதன் மூலம் மேலும் வளர்ச்சியடையலாம். எடுத்துக்காட்டாக, குவாங்துங் மாநிலத்தின் முத்து ஆற்று முகத்துவாரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1500 தொழிலாளர்கள் ஹாங்காங் முதலீட்டுத் தொழில் நிறுவனங்களில் பணி புரிகின்றனர். ஹாங்காங் மக்கள் தொகையைப் போல இது 2 மடங்குக்கு மேலாகும்.

மறு புறம் பார்த்தால், கடந்த சில ஆண்டுகளில் அறிவுசார் பொருளாதாரம் வளர்ச்சியடைவதுடன், பெருநிலப்பகுதி லுள்ள வலுவான அறிவியல் ஆராய்ச்சி ஆற்றலும் ஹாங்காங் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உறுதியளித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், ஹாங்காங் பொருளாதாரம், பதனீட்டுப் பொருளாதாரத்திலிருந்து சேவைப் பொருளாதாரமாக வெற்றிகரமாக மாறியது. இதனால், ஹாங்காங்கின் பெரும் வளர்ச்சி காலம் உருவாயிற்று. எதிர்காலத்தில் ஹாங்காங்கின் தொடர்ச்சியான செழுமையை நிலைநிறுத்த வேண்டுமானால், ஹாங்காங் பொருளாதாரம், சேவைப் பொருளாதாரத்திலிருந்து அறிவுசார் பொருளாதாரமாக மாற வேண்டும். எனவே, ஹாங்காங்கிற்கும்

பெருநிலப்பகுதிக்குமிடையிலான அறிவியல் தொழில் நுட்பத்தை வலுப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்று ஹாங்காங்கிலுள்ள நெடுநோக்கு பார்வையுடையோர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது பற்றி ஹாங்காங் நிதித்துறைத் தலைவர் TANG YING NIAN கூறியதாவது, ஹாங்காங்கிற்கும் பெருநிலப்பகுதிக்குமிடையிலான திறமைசாலிகள் மற்றும் கல்வியியல் பரிமாற்றத்தையும் அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பையும் மேம்படுத்துவோம். தொடர்பை வலுப்படுத்துமாறு அறிவியல் ஆய்வு நிறுவனங்களுக்கும் தொழில்களுக்கும் ஊக்கமளித்து, ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்வதும் இரு தரப்புக்கும் பயனும் வெற்றியும் தருவதுமான நிலைமையை உருவாக்குவோம் என்றார் அவர்.

1 2 3