• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-02 11:21:42    
ஹாங்காங்கிற்கும் சீன பெருநிலப்பகுதிக்குமிடையிலான பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு

cri

சீனப் பெருநிலப்பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஹாங்காங்கிற்கும் சாதகமான நிலைமை உண்டு. இதில் பக்குவமடைந்த அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு முறைமை, சீரான நிதித் திரட்டல் சூழல் பரந்துபட்ட சர்வதேசத் தொடர்பு முதலியவை அடங்கும். பெருநிலப்பகுதியின் தொழில் நிறுவனங்கள் பல, ஹாங்காங்கின் இந்த மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, அதைத் தாம் சர்வதேசச் சந்தையில் நுழைவதற்கான ஒரு மேடையாகப் பயன்படுத்துகின்றன என்று TANG YING NIAN கருத்து தெரிவித்தார். வீட்டுப் பயன்பாட்டுச் சாதனம், தகவல், செய்தித்தொடர்பு முதலிய அலுவல்களில் ஈடுபடும் சீனப் பெருநிலப்பகுதியின் பிரபல தொழில் நிறுவனமாக T C L குழுமம் திகழ்கின்றது. ஹாங்காங் ஒரு நல்ல மேடை என்று இக்குழுமத்தின் தலைவர் லீ துங் சங் பாராட்டினார்.

2003ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நுழைந்து மறு ஆண்டு ஹாங்காங் பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிடத் துவங்கிய GOME மின் சாதனக் குழுமம், சீனாவின் மிகப் பெரிய வீட்டுப் பயன்பாட்டுச் சாதன விற்பனைத் தொழில் நிறுவனம் ஆகும். இக்குழுமத்தின் நிர்வாக இயக்குநர் DU JUAN அம்மையார் எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். சர்வதேச நிதி, வர்த்தக மற்றும் சுற்றுலா மையங்கள் என்ற ஹாங்காங்கின் மேம்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி, பல்வேறு பெரிய சர்வதேச நிதி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் தான், நிதி முதலீட்டாளர்களை GOME குழுமம் வெற்றிகரமாக உட்புகுத்தியுள்ளது. தொழில் நிறுவனத்தின் வேகமான

வளர்ச்சிக்கு இது போதியளவு நிதியுதவியை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

ஹாங்காங்கில், புதிய சர்வதேச மேலாண்மை அனுபவங்களுடன் GOME குழுமம் மேலும் அதிகமாகத் தொடர்பு கொண்டுள்ளது. ஹாங்காங் தொழில் நிறுவனங்களுடன் போட்டியிடுவதன் மூலம், தொடர்ந்து கற்றுக்கொண்டு, சீர்திருத்தமும் புத்தாக்கமும் செய்வதால் போட்டியாற்றல் வேகமாக வலுப்பட்டுள்ளது. தற்போது GOME குழுமம் சீனப் பெருநிலப்பகுதியின் 220க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் பெரிய நகரங்களில் நுழைந்துள்ளது. சந்தையில் அது வகிக்கும் விகிதம் தொடர்ந்து அதிகரித்துவருகின்றது என்றார் அவர்.


1 2 3