• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-05 07:51:14    
தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவுக்கான தயாரிப்பு

cri

கலை.......ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவு நாளாகும். ஆகவே இதை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்ச்சி இப்போது முதல் நாங்கள் ஆயத்தம் செய்யத் துவங்கியுள்ளோம். கடந்த திங்கள் கிழமை காலை ஈரோடு மாவட்ட நேயர் மன்றத்தின் பொறுப்பாளர்களுடன் அதற்கான சிறப்பு நிகழ்ச்சி பதிவு செய்தோம்.

கிளீ........தொலை பேசி மூலம் சிறப்பு நிகழ்ச்சியை பதிவு செய்து உருவாக்க அனைத்து நேயர்களுக்கும் வசதியும் வாய்ப்பும் கிடைப்பது குறைவு.

கலை.......ஆமாம். ஆகவே தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேயர் மன்றங்கள் மூலம் நிகழ்ச்சியை பதிவு செய்து ஒலி நாடாவை அனுப்புமாறு கடந்த வாரத்தில் தொலை பேசி மூலம் அனைத்திந்திய சீன வானொலி தமிழ் நேயர் மன்றத்தின் தலைவர் எஸ் செல்வம் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

கிளீ........செல்வம் இந்த கோரிக்கையை உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டு நேயர் மன்ற பொறுப்பாளர்களிடம் அறிவித்திருப்பார் என்று நம்புகின்றேன்.

கலை.......ஆமாம். அவர் கடந்த வாரத்தில் தொடர்புடைய நேயர் மன்ற பொறுப்பாளர்களுக்கு ிச்செய்தியை தொலை பேசி மூலம் அறிவித்தார்.

கிளீ.......இப்போது பால குமார் பெய்சிங்கிற்கு வரும் வாய்ப்பை பயன்படுத்தி நேயர் மன்றத் தலைவர்கள் ஒலி நாடாக்களை அவரிடம் தந்தால் அவர் பெய்சிங்கிற்கு கொண்டு வரலாமே.

1 2 3