• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-05 07:51:14    
தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவுக்கான தயாரிப்பு

cri

கலை......உங்கள் எண்ணம் என் எண்ணத்துடன் ஒத்தது. பால குமாருடன் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு எங்கள் எண்ணத்தை விளக்கிக் கூறினோம்.

கிளீ.......அவர் எப்படி பதிலளித்தார்?

கலை.......மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். ஆகவே நேயர் மன்றத் தலைவர்கள் தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறப்பு நடவடிக்கைகளில் பங்கு எடுக்க வேண்டுமாயின் மன்ற உறுப்பினர்களை அணிதிரட்டி உடனடியாக பதிவு செய்து ஒலி நாடாவை பாண்டிசேரி என் பால குமாருக்கு அனுப்புங்கள்.

கிளீ........சிறப்பு நிகழ்ச்சி என்றால் பேச்சு மட்டுமல்ல கதை சொல்வது, பாடல் பாடுவது, கவிதை, நாடகம் போன்ற பல்வேறு வடிவங்களில் நிகழ்ச்சிகளை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

கலை.......உங்கள் யோசனை சிறப்பானது. நேயர்கள் இதை போல் பல வடிவங்களில் சிறப்பு நிகழ்ச்சியை தயாரிக்கலாம். பல்வகை வடிவங்களில் சிறப்பு நிகழ்ச்சியை உருவாக்கினால் ரசனையோடும் விறுவிறுப்பாகவும் கேட்பதற்கு சுவையாகவும் இருக்கும்.

கிளீ.......ஆகவே அன்பு நேயர்களே. இந்த கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி கேட்ட பின் நன்றாக யோசித்து ஆயத்தம் செய்து மன்றக் கூட்டத்தில் ஒரு நாளை நீர்மானித்து அந்த நாளில் மொத்தமாக சிறப்பு நிகழ்ச்சியை பதிவு செய்யுங்கள். பின் அந்த ஒலி நாடாவை என் பால குமாருக்கு அனுப்புங்கள்.

கலை.......இங்கே நினைவு கூர வேண்டியது பால குமார் ஜுலை திங்கள் 2ம் நாள் சென்னையை விட்டு புறப்பட வேண்டும்.

கிளீ.......ஆகவே நீங்கள் உருவாக்கிய நிகழ்ச்சிகள் கொண்ட ஒலி நாடாவை ஜுன் திங்கள் 25ம் நாளுக்குள் அவருக்கு அனுப்ப வேண்டும்.

கலை.......இதை மறக்க கூடாது.

கிளீ........நாம் பலவற்றைச் சொன்னோம். ஆனால் இதுவரை பால குமாருடன் தொடர்பு கொள்ளக் கூடிய செல்லிட பேசி பற்றி நண்பர்களுக்கு தெரிவிக்க வில்லை.

1 2 3