• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-05 07:51:14    
தமிழ் ஒலிபரப்பின் 44வது ஆண்டு நிறைவுக்கான தயாரிப்பு

cri

கலை.......நினைவூட்டியதற்கு மிக்க நன்றி. அவருடன் தொடர்பு கொள்ளக் கூடிய செல்லிட பேசி என் 9842313233.

கிளீ.....நண்பர்களே தாராளமாக பால குமாருடன் தொடர்பு கொண்டு நிகழ்ச்சி உள்ளிட்ட ஒலி நாடாவை அனுப்புங்கள்.

கலை..........தவிரவும், உங்கள் குரல் நிகழ்ச்சிக்கான ஒலி நாடாக்களும் அவருக்கு அனுப்பலாம் என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றேன்.

கிளீ........கலை நாம் ராட்சத பாண்டா என்னும் பொது அறிவுப் போட்டிக்கான சிறப்புப் பரிசு பெறுவது பற்றி நிறைய பேசினோம்.

கலை......ஆமாம். இதில் சந்தேகம் உண்டா?

கிளீ........இல்லை. சிறப்புப் பரிசு தமிழ்ப் பிரிவுக்கு வழங்கப்பட்டது. முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பெறுவோரின் பெயர் பட்டியல் எப்போது நேயர்களுக்கு அறிவிக்க வேண்டும்?

கலை.......இது கொஞ்சம் சிக்கலான வேலை. இதுவரை எத்தனை முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு எண்ணிக்கைகள் என்று எனக்கு தெரியப்படுத்த வில்லை. ஆனால் பரிசு தேர்வு செய்வதற்கான ஆயத்த வேலையை நிறைவேற்றியுள்ளோம். பரிசு வழங்கப்படும் எண்ணிக்கையை எங்களுக்கு அறிவித்தவுடன் நாங்கள் இந்த வேலையை உடனடியாக துவக்குவோம்.

கிளீ........ஆகவே. நண்பர்களே பொறுமையுடன் காத்திருங்கள் நான் கொஞ்சம் அவசரப்பட்டு கேட்டுவிட்டேன் அப்படிதானே.

கலை........நேயர்களே முந்தி நீங்கள் இந்த கேள்வியை கேட்டுவிட்டீர்கள். ஆனால் இது இயல்புதான். உகந்த பரிசு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டவுடன் பரிசுத் தேர்வு செய்யும் வேலையை துவக்குவோம். தேர்வு செய்யும் வேலை முடிந்ததும் நேயர்களுக்கு அறிவிப்போம்.


1 2 3