க்ளீட்டஸ்: முதலில் கடிதங்கள் மூலம் எமக்கு வந்த கருத்துக்கள். பாண்டிச்சேரி பெரியகாலாப்பட்டு நேயர் பி. சந்திரசேகரன் சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். சீன நாகரீகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் மஞ்சள் நதி பற்றி பல முக்கிய கருத்துக்களை ராஜாராம் அவர்களும், விஜயலட்சுமி அவர்களும் அளித்த கலந்துரையாடல் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. இந்த ஆறு மஞ்சளாக இருப்பதற்கு என்ன காரணம், 5 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ஆறு கடலில் சங்கமிக்கும் அழகு இவற்றை மனதுக்குள் கண்டு ரசித்தேன். நிகழ்ச்சியை வழங்கியமைக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
கலை: சீன மகளிர் நிகழ்ச்சியைக் கேட்டபின் திருச்சி மணமேடு தேவராஜா எழுதிய கடிதம்.
சீன மகளிரின் அறிவியல் அறிவு நிலை என்ற கட்டுரையைக் கேட்டேன். உலக அளவிலும், சீனாவில் ஆண்களை விடவும் அறிவியல் அறிவு நிலையில் சீன மகளிர் பின் தங்கியிருப்பதைக் கருத்தில் கொண்டு, கிராம, நகர மற்றும் நகரங்களில் குடியேறி பணிபுரியும் அனைத்து நிலை மகளிரின் அறிவியல் அறிவு நிலையை உயர்த்த சீன அரசு மேற்க்கொண்டுள்ள ஆய்வுகளும், திட்டப்பணிகளும் பாரட்டுக்குரியவை. தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூகம், நிர்வாகம் ஆகிய துறைகளிலும் இந்த மேம்பாடு நடவடிக்கைகளால் விரைவில் மாபெரும் மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன்.
க்ளீட்டஸ்: அதே நிகழ்ச்சி குறித்து புதுகை ஜி. வரதராஜன் எழுதிய கடிதம். எந்த ஒரு நாடு என்றாலும் பெண்களின் பணி விலைமதிப்பற்றதாகவே விளங்குகிறது. பெண்கள் தனியாகவோ அல்லது ஆண்களின் பின்னால் மறைமுக சக்தியாகவோ இருந்து நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றி வருகின்றனர். சீனாவில் பெண்கள் அறிவியல் அறிவு பெறாததால் சுகாதார பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் உடல்நலக் கேட்டை எதிர்கொள்கின்றனர். இதற்கென, சீன அரசு மகளிர் அறிவியல் அறிவு மேம்பாட்டுத் திட்டத்தை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தி வருவதை பெண்களின் சார்பாக வரவேற்கிறேன்.
1 2 3
|