• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-10 15:10:06    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: அடுத்து சானாந்தோப்பு வி.பி.சாமி எழுதிய கடிதம். 2010ம் ஆண்டில் சீனா இரண்டாவது பெரிய சுற்றுலா நாடாக மாறும் என்ற செய்தியைக் கேட்டேன். மகிழ்ச்சிதரக்கூடிய செய்தியாகும். 4 கோடியே 96 லட்சம் பேர் பயணம் மேற்கொள்வதைப் பற்றி கேட்டதும் வியப்பாக இருந்தது. வளரும் நாடுகள் இவ்வாறு வளர்ச்சியடைவது மகிழ்ச்சியான் விடயம். மேலும் அமெரிக்காவுக்கு சீனச் சந்தை வழங்கும் வேலை வாய்ப்பு பற்றிய செய்தி சீனாவின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை கல்முனை எம். எம். நிப்ராஸ் மன்சூர் எழுதிய கடிதம். நண்பர் அறிமுகம் செய்து நான் சீன வானொலியைக் கேட்க ஆரம்பித்தேன். ஆச்சரியாமக இருந்தது. சீனாவிலும் தமிழ் மொழியா? தமிழ் பேசும் மக்கள் சீனாவில் வாழ்கின்றனரா? என்பது போன்ற கேள்விகள் என்னுள் எழுந்தன. இவ்வெண்ணங்களை எழுப்பிய சினா வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டபின், சீன மண் தமிழுக்கு வழங்கும் மதிப்பும், பங்களிப்பும் புரிந்தது என்று எழுதியுள்ளார்.

கலை: அழகாக கருத்தைச் சொன்ன மன்சூருக்கு நன்றிகள். தொடர்ந்து இலங்கை அன்பர் எஸ். எச். ரிஸ்னி எழுதிய கடிதம். இலங்கையிலிருந்து சீன வானொலியைக் கேட்கும் நான் உங்கள் தீவிர ரசிகன். உங்கள் நிகழ்ச்சிகள் யாவும் மிகவும் நன்றாகவும், பயனுள்ளவையாகவும் உள்ளன. நேயர் நேரம், நேருக்கு நேர் போன்ற நிகழ்ச்சிகள் எனக்கு விருப்பமானவை. சீனத் தமிழொலி இதழில் காணப்படும் விடயங்களும் பயனுள்ளவையாக உள்ளன என்று எழுதியுள்ளார்.

1 2 3