• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    Apr 8th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-30 15:11:05    
சீன நகரங்களில் வன வளர்ப்பு

cri

பொதுவாகக் கூறின், நகரங்களிலிருந்து வெகு தொலைவிலுள்ள மலைப் பிரதேசங்களில் வனங்கள் உள்ளன. நகரங்களில் வனத்தை காண்பது அரிது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் உறைவிடச் சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக, சீனாவின் பல நகரங்களில் வன வளர்ப்புப் பேரெழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கு, சீன நகரங்களின் தொடர வல்ல வளர்ச்சிக்குத் துணை புரியும். அத்துடன், அதற்கு இயற்கைச் சூழல் வளமும் உருவாக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீன நகர வனம் பற்றிய 4வது கருத்தரங்கு அண்மையில் மேற்குச் சீனாவின் ஸ்சுவான் மாநிலத்தின் தலைநகரான செங்துவில் நடைபெற்றது. செங்து நகரம் உள்ளிட்ட 4 நகரங்கள் இதில் தேசிய நிலை வன நகரங்கள் என்ற புகழைப் பெற்றுள்ளன. இது வரை சீனாவில் 7 நகரங்கள் இப்புகழைப் பெற்றுள்ளன. சீன நகர வன வளர்ப்பில் முன் மாதிரியாக இந்நகரங்கள் திகழ்கின்றன. ஐ.நாவின் வன மன்றச் செயலகத்தின் உயர் நிலைத் திட்டப்பணி அதிகாரி மகேந்திரா ஜோஷி, சீனாவின் வன வளர்ப்புப் பணியை வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறியதாவது,

நகர மற்றும் நாட்டின் பசுமை மயமாக்கத்துக்காக, சீனாவின் உள்ளூர் அரசுகளும் மத்திய அரசும் மேற்கொண்டுள்ள முயற்சிகள் என் மனதில் ஆழப்பதிந்துள்ளன என்றார் அவர்.

தேசிய நிலை வன நகரமாக விளங்க வேண்டுமானால், தென் சீனாவின் நகரங்களில் காடுகளின் பரப்பளவு 35 விழுக்காட்டைத் தாண்ட வேண்டும். வட சீனாவின் நகரங்களில் இது 25 விழுக்காட்டை மிஞ்ச வேண்டும் என்று சீனாவின் தேசிய நிலை வன நகரம் பற்றிய வரையறை கோரியுள்ளது.

வன இயற்கைச் சூழலின் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்காக செங்து நகரம் எப்பொழுதும் பாடுபட்டுவருகின்றது. கடந்த 20 ஆண்டுகளில் இந்நகரில் மர வளர்ப்பு பரப்பளவு 23 விழுக்காட்டிலிருந்து 36 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சீனாவின் மாநிலத் தலை நகரங்களில் மர வளர்ப்பு பரப்பளவு மிகவும் வேகமாக அதிகரிக்கும் பெருமையை செங்து நகரம் பெற்றுள்ளது. இந்நகரில் மர வளர்ப்பினால், நகரவாசிகளுக்கு அதிகமான பழ வகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது மட்டுமல்ல, தானிய மற்றும் காய்கறி உற்பத்தியும் 15 விழுக்காடு அதிகரித்துள்ளது. எரியாற்றல் செலவில் 10 விழுக்காடு முதல் 15 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது.

1 2 3
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040