இயற்கைச் சூழல் பயன் தவிர, நகர வன வளர்ப்பினால் விளையும் பொருளாதாரப் பயனும் குறிப்பிடத் தக்கது. ஏனெனில் உறைவிடச் சூழ்நிலையும் பெரிதும் சீராகியுள்ளது. இதன் விளைவாக, அதிகமான முதலீட்டுத் தொகையும் உயர்ந்த கல்வி அறிவு பெற்றவர்களும் உட்புகுத்தப்பட்டுள்ளனர். நகரின் தொடர வல்ல வளர்ச்சிக்கு இது துணை புரிகின்றது. நகர வன வளர்ப்பு, சென்து நகரப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளது என்று இந்நகராட்சித் தலைவர் GE HONG LIN கருத்து தெரிவித்தார்.
வெவ்வேறான நகரங்களின் தனிச்சிறப்புகளும் வேறுபடுகின்றன. நகர வன வளர்ப்பில் கண் மூடித்தனமாக ஈடுபடக் கூடாது. தத்தமது நகரங்களின் தனிச்சிறப்புகளுக்கேற்ப, திட்டமிட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பைச் சேர்ந்த வனப் பாதுகாப்புத் துறை அதிகாரி மிச்சேல் காவ்தியர் அம்மையார் இது பற்றி கூறியதாவது, நிலைமை வேறுபட்டதாக இருப்பதால் பல்வேறு நகரங்கள் தத்தமது நிலைமைக்கேற்ற தீர்வு வழிமுறையைக் கண்டறிந்து பயன்படுத்தி, தமக்குரிய தனிச்சிறப்பை நிலைநிறுத்தலாம் என்றார் அவர்.
நடப்புக் கருத்தரங்கில் அறிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டது. திட்டம், கட்டுமானம், மேலாண்மை ஆகியவற்றில் அறிவியல் தொழில் நுட்பம், வல்லுநர் மற்றும் சட்ட விதிகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் மூலம் பிரதேசத் தனிச்சிறப்பு வாய்ந்த நகர வன வளர்ப்பை மேம்படுத்த வேண்டும் என்று அறிக்கை கோரியுள்ளது.
நேயர்கள் இதுவரை, சீன நகரங்களில் வன வளர்ப்பு பற்றி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது. 1 2 3
|