• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-07-30 15:11:05    
சீன நகரங்களில் வன வளர்ப்பு

cri

சீனாவில், செங்து நகரம் போல, தேசிய நிலை வன நகரம் என்ற புகழைப் பெற்றிருக்கும் நகரங்களின் எண்ணிக்கை குறைவல்ல. மொத்தம் 124 நகராட்சித் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு, நகர வன வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். சீனாவின் திபெத் தன்னாட்சிப்

பிரதேசத்தின் தலைநகரான லாசா நகராட்சித் தலைவர் டோஜெச்சூ எமது செய்தியாளரிடம் பேசுகையில், செங்து நகரின் வன வளர்ப்பு அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, லாசா நகரில் பசுமை மயமாக்கம் மற்றும் உறைவிடச் சூழ்நிலையின் சீராக்கத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டதாகக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது, நாட்டின் முக்கிய இயற்கைச் சூழல் பாதுகாப்புத் திரையாக விளங்கும் லாசா நகரத்தை, தேசிய இன மணம் கமழும் பீடபூமி சுற்றுலா நகராக மாற்ற பாடுபட்டுவருகின்றோம். செங்து நகரின் அனுபவத்தைக் கற்றுக்கொள்வதன் மூலம், லாசாவைத் தேசிய நிலை வன நகரமாக மாற்றுவதற்கு உறுதியான அடிப்படையை உருவாக்கியுள்ளோம். லாசாவின் வானம் மேலும் நீல நிறமாகவும் மேகங்கள் மேலும் வெண்ணிறமாகவும் புற்கள் மேலும் பசுமையாகவும் மலர்கள் மேலும் அழகாகவும் மரங்கள் மேலும் அடர்ந்ததாகவும் விளங்கப் பாடுபடுகின்றோம் என்றார் அவர்.

சீனாவின் நகரக் கட்டுமானப் பணி வேகமாக வளர்வதும் நில வளம் நாளுக்கு நாள் பற்றாக்குறையாக இருப்பதுமான இந்நிலைமையில் இயற்கைச் சூழல் சீரமைவுக்காக, செங்து நகரம் தொடர்ந்து அதிக அளவு நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தகைய வளர்ச்சிக் கருத்து, தங்களது நகரின் கட்டுமானத்துக்கு ஒரு முன் மாதிரியாக விளங்கும் என்று கிழக்குச் சீனாவின் கடலோர நகரான சியாமன் நகர வனத்தொழில் பணியகத்தின் லீசச்சியெ கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில் உலகில் புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனங்கள் பல தத்தமது தலைமையகங்களை சியாமன் நகரில் நிறுவியுள்ளன. நகரின் பொருளாதார வளர்ச்சிக்கு இது வாய்ப்பினை வழங்கியுள்ளது என்று அவர் கூறினார். கடலோரத்தில் அமைந்துள்ள அதன் நில அமைவு மேம்பாட்டைத் தவிர, சீரான உறைவிடச் சூழலும் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் காரணமாகும் என்றார் அவர். அவர் மேலும் கூறியதாவது,

நில அமைவு மேம்பாட்டைக் கொண்ட சியாமன் நகரில் எழில் மிக்க இயற்கைச் சூழலும் மன நிறைவுத் தரக் கூடியது. DELL, அமெரிக்காவின் கொடாக் நிறுவனம் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் சியாமன் நகரில் நுழைந்துள்ளன. அவற்றின் தொழிற்துறை உற்பத்தி மதிப்பு, இந்நகரின் மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்புக்கு முக்கிய பங்கினை ஆற்றியுள்ளது. DELL நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி மதிப்பு, பல்லாயிரம் கோடி ரென்மின்பி யுவானாகும் என்றார் அவர்.

1 2 3