தற்போது சீனாவின் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சியடைந்துவருகின்றன. வேலை வாய்ப்புகளை வழங்கும் முக்கிய துறையாக அவை படிப்படியாக மாறிவருகின்றன. 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை, அரசு சாரா தொழில் நிறுவனங்கள் ஆண்டுதோறும் 50 லட்சம் முதல் 60 லட்சம் வரையான வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இது, நகரங்களில் புதிதாக அதிகரிக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளில் நான்கில் மூன்று பகுதியாகும்.
சீனாவில் பொது உடைமை முறையற்ற அனைத்து தொழில் நிறுவனங்களும் அரசு சாரா தொழில் நிறுவனங்களாகும். புள்ளிவிபரங்களின் படி, கடந்த ஆண்டின் இறுதி வரை, சீனாவில் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. ஆண்டுதோறும் அவை செலுத்தும் வருமான வரித்தொகை 55 கோடி ரன்மின்பி யுவானை மிஞ்சியுள்ளது.
வட சீனாவின் தியென்ஜின் மாநகரைச் சேர்ந்த ஹொபிங் பிரதேசத்தில் வாழும் LI LAN YUAN, 1994ஆம் ஆண்டு வேலையிலிருந்து விலகிய பின்னர், பணிப்பெண்ணாகவும் சுத்தம் செய்பவராகவும் பணி புரிந்தார். இதைத் தொடர்ந்து அவர் வீட்டு வேலைச் சேவை நிறுவனம் ஒன்றை நிறுவினார். தற்போது BLUEPRINT எனப்படும் இந்நிறுவனம் 10 லட்சம் ரன்மின்பி யுவான் மதிப்புள்ள நிலையான சொத்துக்களைக் கொண்டுள்ளது. ஆண்டுதோறும் அது 40 லட்சம் யுவான் வருமானம் பெறுகிறது. LI LAN YUAN, தியென்ஜின் மாநகரில் பிரபல அரசு சாரா தொழில் முனைவோராக மாறியுள்ளார். அவர் கூறியதாவது, வேலையிலிருந்து விலகிய 600க்கும் அதிகமானோரைப் பணிக்கு அமர்த்தியுள்ளேன். நானும் வேலையிலிருந்து விலகியவர். இதனால் என்னால் இயன்ற அளவுக்கு, அதிகமானோரைப் பணிக்கு அமர்த்தி அவர்களுடன் சேர்ந்து பணி புரிய விரும்புகின்றேன் என்றார் அவர்.
1 2 3
|