LI LAN YUAN வெற்றி பெற்றிருப்பதற்கு சீன அரசு செயல்படுத்தும் ஊக்கக் கொள்கையும் முக்கிய காரணமாகும். கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் பல்வேறு இடங்களில், மீண்டு வேலை வாய்ப்பு வழங்கும் சேவை மையத்தை நிறுவுவது, வரி வசூலிப்புத்
தொகையைக் குறைப்பது அல்லது விலக்குவது, சிறு கடன் தொகை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், உழைப்பாளர்கள் தாங்களே தொழிலை நாடுவதற்கும் நடத்துவதற்கும் ஊக்கமும் ஆதரவும் அளிக்கப்பட்டுள்ளன. தவிர, அரசு சாரா பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, நிலப் பயன்பாடு, தொழில்-வணிகப் பதிவு, வரி வசூலிப்புத் தொகை குறைப்பு மற்றும் விலக்கு, அரசுத் தொழில் நிறுவனங்களின் சீர்திருத்த முறைமையில் அரசு சாரா பொருளாதாரம் பங்குகொள்வது உள்ளிட்ட முன்னுரிமையுடன் கூடிய கொள்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இக்கொள்கைகளினால், LI LAN YUANஐ போல, சுய சார்பாகத் தொழில் நடத்துவோர் பெரும் ஆதரவு பெற்றுள்ளனர். அத்துடன், அரசு சாரா தொழில் நிறுவனங்களில் பணி புரிவோரின் வாழ்க்கை நிலையும் மேம்பட்டுள்ளது.
அரசின் நேரடியான ஆதரவுக் கொள்கை தவிர, திறமைசாலிகளை உட்புகுத்தவும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு சாரா தொழில் நிறுவனங்களுக்கு உதவியளிப்பதில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில் சீன அரசு நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த அரசு சாரா தொழில் நிறுவனங்களின் பணி அமர்த்தல் வார நடவடிக்கை, நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. தியென்ஜின் மாநகரில் மட்டும், 1000க்கும் அதிகமான இத்தகைய தொழில் நிறுவனங்கள் இலவசமாகக் கண்காட்சியில் பங்குகொண்டன.
அரசு சாரா தொழில் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சியடைவதால், மேலும் அதிகமான திறமைசாலிகள் ஈர்க்கப்பட்டுள்ளனர். அவை வழங்கும் வேலைவாய்ப்புகள் சீனாவின் பல்கலைக்கழகப் பட்டதாரிகளை ஏன் வெளிநாடுகளில் கல்வி பெற்று நாடு திரும்பியவர்கள் உள்ளிட்ட உயர் நிலை வல்லுநர்களைக் கூட பெரிதும் ஈர்த்துள்ளன. அரசு சாரா தொழில் நிறுவனங்களின் பணி அமர்த்த வார நடவடிக்கையின் போது,பணி அமர்த்தல் கூட்டத்தில் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் பலர் கலந்துகொண்டனர். தென் சீனாவின் குவாங்சோ நகரிலிருந்து வந்த இளங்கலைப் பட்டதாரி ZHU CHENG LIN இது பற்றி கூறியதாவது.
1 2 3
|