அரசு சாரா தொழில் நிறுவனங்களில் தனிநபர் தன் திறமையை மேம்படுத்துவதற்கு அதிக நேரம் தேவைப்படாது. திறமையை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகளும் சற்று அதிகம் என்றார் அவர்.
கடந்த ஆண்டு சீனாவில், பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற 12 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெறவில்லை. இவ்வாண்டு பல்கலைக்கழகப் பட்டம் பெறவுள்ள மாணவர்களைச் சேர்த்தால் மொத்த எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டும். இத்தகைய நிலைமையில், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் தொடர்ச்சியான வளர்ச்சி, சீனாவின் பல்கலைக்கழக மாணவர்களின் வேலை வாய்ப்புப் பிரச்சினையை ஓரளவில் தணிவுபடுத்தும். இது குறித்து அனைத்து சீனத் தொழில்-வணிக சம்மேளனத்தின் துணைத் தலைவர் CHU PING பேசுகையில், சிறப்புப் பயிற்சி பெற்ற, கல்வியறிவுடைய திறமைசாலிகளைச் சேர்த்துக்கொள்வது அரசு சாரா தொழில் நிறுவனங்களின் கல்வியறிவு மற்றும் பண்பாட்டை மேம்படுத்தும் என்றார். அத்துடன், ஏராளமான பல்கலைக்கழக மாணவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறலாம். இது இரு தரப்புகளுக்கும் நன்மை தரும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் கூறியதாவது,
பல்கலைக்கழகப் பட்டதாரிகள் உள்ளிட்ட உயர் நிலை வல்லுநர்கள் அரசு சாரா தொழில் நிறுவனங்களில் பணி புரிவது என்ற வழி முறை நடைமுறைக்கு வருவதால், இத்தகைய தொழில் நிறுவனங்கள் செவ்வனே வளர்ச்சியடையலாம். அதே வேளை, பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கும் தத்தமது மதிப்பை வெளிப்படுத்துவதற்கும் இது நல்ல வாய்ப்பினை வழங்கியுள்ளது என்றார் அவர்.
சீனாவின் சிறந்த அரசு சாரா தொழில் நிறுவனங்களின் தொழில் நடத்தல் வரலாறு மற்றும் எழுச்சி பற்றி அறிமுகப்படுத்தவும் அரசு சாரா தொழில் நிறுவனங்களில் பணி புரியுமாறு பல்கலைக்கழக மாணவர்களை ஊக்குவிக்கவும் மேலும் அதிகமான அரசு சாரா தொழில் முனைவோர், நாட்டின் உயர் கல்வி நிலையங்களுக்குச் செல்ல அனைத்து சீனத் தொழில்-வணிகச் சம்மேளனம் ஏற்பாடு செய்யும் என்றும் அவர் கூறினார். 1 2 3
|