• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-27 15:24:56    
சீன வேளாண் துறையில் நீர் சிக்கனப் பயன்படு

cri

சீனாவில் வேளாண் துறை நீரை மிக அதிக அளவில் பயன்படுத்தும் துறையாகும். அதன் நீர் பயன்பாட்டு அளவு, நாட்டின் மொத்தப் பயன்பாட்டு அளவில் 64 விழுக்காட்டுக்கு மேலாகும். ஆனால், இத்துறையின் பயனுள்ள நீர் பயன்பாட்டு விகிதம், 50 விழுக்காட்டை எட்டவில்லை. நீர் வளம் கடும் பற்றாக்குறையாக இருக்கும் சீனாவில், தற்போது பல பிரதேசங்கள் வேளாண் துறையில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதைப் பரவல் செய்யத் துவங்கின. நீர் வளச் சிக்கனம் என்ற முன்னிபந்தனையில் வேளாண் துறையில் மேலும் அதிகப் பயன் பெறச் சீனா பாடுபடுகின்றது. வரலாற்றில் சீனாவின் வட பகுதி, வறட்சிப் பிரதேசமாகும். அங்கு, நீர் வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வேளாண் துறை பற்றி அறிந்துகொள்ள, இப்போது நாம் வட சீனாவின் கிராமங்களுக்குச் சென்று பார்ப்போம்.

சான்துங் மாநிலத்தின் துங்லியாங் கிராமத்தில் வாழும் 65 வயது லியூசின்லியாங் என்பவர், சுமார் 30 ஹெக்டர் பரப்பளவுடைய நிலத்திலுள்ள திராட்சைத் தோட்டத்தின் பொறுப்பாளர் ஆவார். அவருடைய திராட்சைத் தோட்டத்துக்குள் நுழைந்ததும் திராட்சைக் கொடிகள் படர்ந்துள்ள அனைத்து பந்தர்களிலும் மெல்லிய ரப்பர் குழாய்கள் உள்ளன என்பதைக் காணலாம். இந்தக் குழாய்களில் சிறிய துவாரங்கள் பல உள்ளன. சிறிய நீர் துளிகள், இந்தக் குழாய்களின் துவாரங்களிலிருந்து சொட்டுச் சொட்டாக விழுந்து நிலத்துக்குள் ஊடுருவுகின்றன. உலகில் மிக முன்னேறிய சொட்டு நீர் பாசனத் தொழில் நுட்பத்தைத் தாம் பயன்படுத்தியுள்ளதாகச் செய்தியாளரிடம் அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

குறிப்பாகத் திராட்சைப் பழ வகைக்கு அதிக அளவில் நீர்பாசனம் செய்யக் கூடாது. நிலத்துக்கு 20 சென்டி மீட்டர் கீழே திராட்சையின் வேர் நன்கு வளர்வதன் காரணமாக, இவ்விடத்தில் உரம் போடுகின்றேன். சொட்டு நீர் பாசனக் கருவி மூலம், நிலத்திற்குக் கீழுள்ள 20 சென்டி மீட்டர் இடத்தில் அதிக அளவில் நீர்ப்பாசனம் செய்யப்படுவதால், அதற்கும் கீழே உரம் நுழையாமல் தவிர்க்கலாம் என்றார் அவர்.

2000ஆம் ஆண்டில் திராட்சைப் பயிரிடவும் அதற்கு 2 ஆண்டுகளுக்குப் பின்னர், சொட்டு நீர் பாசனக் கருவியைப் பயன்படுத்தவும் துவங்கியதாக அவர் கூறினார். முன்பு ஒரு ஹெக்டர் திராட்சை விளைச்சல் 60 கிலோகிராமாக இருந்தது. ஆனால் தற்போது 120 கிலோகிராமை எட்டியுள்ளது. சொட்டு நீர் பாசனக் கருவி பயன்படுத்தப்பட்டிருப்பதால் ஒரு ஹெக்டர் திரைட்சை விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் சுமார் ஒரு மடங்கு அதிகரித்துள்ளது.

1 2 3