விவசாயிகளின் நபர்வாரி விளை நிலம் குறைவாக இருப்பது, தனிப்பட்ட முறையில் வேளாண் துறையில் ஈடுபடுவது ஆகியவற்றின் காரணமாகவும், வேளாண் துறையில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் திட்டப்பணி, ஒரு குடும்பம் அல்லது ஒரு கிராமம் அல்லது ஒரு குழுவால் மட்டுமே நிறைவேற்றப்பட முடியாது என்பதன் காரணமாகவும் விவசாயிகள் தனித்தனியாகச் சொட்டு நீர் பாசனத்தில் ஈடுபடும் திறன் எல்லைக்குட்பட்டது என்றார் அவர்.
சீனத் தேசிய நீர் மூல வள அமைச்சு முன்முயற்சியுடன் திட்டமிடுவதோடு, முதலீட்டை அதிகரிக்க சமூக ஆற்றலையும் அணிதிரட்டும். தானிய உற்பத்தி பிரதேசம், நீர் பற்றாக்குறைப் பிரதேசம், வறிய பிரதேசம் ஆகியவற்றில் நீர் வளச் சிக்கனப் பயன்பாட்டுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் புதிய தொழில் நுட்பத்தையும் புதிய செய் முறையையும் பயன்படுத்துவதில் விவசாயிகளுக்கு வழிகாட்டி ஊக்கமளிக்கும் என்று லீயுவான்ஹுவா கூறினார். 1 2 3
|