• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-08-27 15:24:56    
சீன வேளாண் துறையில் நீர் சிக்கனப் பயன்படு

cri

சொட்டு நீர் பாசனம், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் ஒரு முன்னேறிய நீர் பாசன வழிமுறையாகும். ஆனால் அதற்கான முதலீட்டுத் தொகை அதிகமாக இருப்பதால், பெரும்பாலான விவசாயிகள் தனியாக முதலீடு செய்ய முடியாமல் போயினர். ஆகவே, வேளாண் உற்பத்திப் பொருள் நிறுவனங்கள் கிராமங்களுடன் ஒத்துழைப்பது என்பது, தற்போதைய சீனாவில் இத்தொழில் நுட்பத்தைப் பரவல் செய்வதில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வழிமுறையாகத் திகழ்கின்றது. பூர்வாங்கப் புள்ளிவிபரங்களின் படி, தற்போது சீனாவில் சொட்டு நீர் பாசனத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ள வயல்களின் மொத்தப் பரப்பளவு 8 லட்சம் ஹெக்டரைத் தாண்டியுள்ளது.

இத்தொழில் நுட்பத்தினால், பல இடங்களிலுள்ள விவசாயிகள் வேறு பயிர்களைப் பயிரிடத் துவங்கினர். சான்சி மாநிலத்தின் சிங்சியு மாவட்டத்தைச் சேர்ந்த துங்நன்பாங் கிராமத்தில் கடந்த காலத்தில் சோளம், மக்காச் சோளம் முதலியவை மட்டும் பயிரிடப்பட்டன. சராசரியாக ஒரு ஹெக்டருக்குக் கிடைக்கும் வருமானம், 13 யுவான் மட்டுமே. வறட்சியான நிலத்தில் தானியம் பயிரிடுவதால் நல்ல விளைச்சல் கிடையாது என்பதை அறிந்துகொண்ட இக்கிராமக் கமிட்டித் தலைவர் யாங்சென்லி கிராமவாசிகளுக்குத் தலைமை தாங்கி, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வல்ல, உயர் பயன் தரக் கூடிய ஒரு வகை புல்லைப் பயிரிட்டார். நீரைச் சிக்கனப்படுத்தும் நீர் பாசனக் கருவிகளையும் பயன்படுத்தினார். இது பற்றி அவர் கூறியதாவது,

இதன் விளைவாக விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. முன்பு, சுமார் 666 சதுர மீட்டர் விளை நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் மூலம் விவசாயிகளுக்கு 200 ரென்மின்பி யுவான் வருமானம் கிடைத்தது. புல் மற்றும் பழ மரங்களை வளர்ப்பதன் மூலம் ஆண்டுக்கு 500 யுவான் வருமானம் கிடைக்கின்றது. தற்போது சுமார் 130 ஹெக்டர் பரப்பளவுடைய நிலத்தில் புற்களை வளர்க்கிறோம். தொழில் மயமாக்க மேலாண்மை நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றார் அவர்.

முன்னேறிய சொட்டு நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தைப் பரவல் செய்வதோடு, சீனாவின் பல வேளாண் பிரதேசங்கள், புதிய வகை நீர் வள மேலாண்மை வழி முறையை நிறுவ முயல்கின்றன. தற்போது, சீனாவில் சொட்டு நீர் பாசனத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ள வயல்களின் பரப்பளவு பெரிதும் அதிகரித்துள்ளது. ஆனால் முதலீட்டுத் தொகை போதாது என்பது மிக முக்கிய பிரச்சினை ஆகும். சீனத் தேசிய நீர் மூல வள அமைச்சின் கிராம நீர் வளப் பிரிவுத் துணைத் தலைவர் லீயுவான்ஹுவா எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது

1 2 3