வட சீனாவின் ஹொபெய் மாநிலத்து பொஹை வளை குடாப் பிரதேசத்தில் 102 கோடி டன்னுக்கு மேலான எண்ணெய் படிவு அளவு கொண்ட எண்ணெய் வயல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. JIDONGNANPU எண்ணெய் வயல் எனப்படும் இப்புதிய எண்ணெய் வயல், சீனா ஏன் உலகின் கவனத்தை ஈர்க்கும் மையமாக மாறியுள்ளது.
பொஹை வளை குடா, சீனாவின் எண்ணெய் மற்றும் எரி வாயு வளம் நிறைந்து கிடக்கும் எண்ணெய் மற்றும் எரி வாயு வடி நிலங்களில் ஒன்றாகும். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள NANPU வயலில் எண்ணெய் படிவும் அடர்த்தியானது. அதன் அளவு பெரியது. எண்ணெய் தரமானது. இது போன்ற உயர்ந்த பயன் தரும் தரமான எண்ணெய் வயலை காண்பது அரிது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய எண்ணெய் வயல் இதுவாகும். சீன எண்ணெய் குழுமத்தைச் சேர்ந்த JIDONG எண்ணெய் வயலின் துணைத் தலைமை நிலவியல் நிபுணர் DONG YUE XIA இது பற்றி கூறியதாவதுஇச்செய்தியைக் கேட்டதும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினோம். அலுவலகத்தில் கூட கூச்சலிட்டு ஆரவாரம் செய்தோம் என்றார் அவர்.
இருப்பினும், இந்த வியப்பு ஏற்பட்டதன் பின்னணி எளிதானதல்ல. NANPU எண்ணெய் வயலைச் சேர்ந்த JIDONG எண்ணெய் வயல் நிறுவனம் 1988ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பொஹை வளை குடாவின் சுற்றுப்புறத்திலுள்ள 7 எண்ணெய் வயல்களில் JIDONG எண்ணெய் வயலின் பரப்பளவு மிக சிறியதாகவும் எண்ணெய் உற்பத்தி அளவு மிக குறைவானதாகவும் இருந்துவந்தது. துவக்கத்தில் இந்த எண்ணெய் வயலின் எண்ணெய் அகழ்வுப் பணி முக்கியமாகத் தரைப் பகுதியில் நடைபெற்றது. ஆண்டு எண்ணெய் உற்பத்தி அளவு 3 லட்சத்து 50 ஆயிரம் டன் மட்டுமே. நிதி, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல காரணங்களினால், NANPU எண்ணெய் அகழ்வுப் பணி 1993ஆம் ஆண்டில் துவங்கியது. 2 புகழ்பெற்ற வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுடனான ஒத்துழைப்பில் செயல்பட்டது.. ஆனால் 7,8 ஆண்டுகளுக்குப் பின்னரும் மன நிறைவு தரும் கண்டுபிடிப்பு ஏதும் நிகழவில்லை. பின்னர் JIDONG எண்ணெய் வயலில் புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு, தரைக்கடி எண்ணெய் கட்டமைப்பு பற்றிய சரியான தரவுகளைப் பெறப்பட்டதால் புதிய நிலைமை உருவாகியுள்ளது. திடமான நம்பிக்கை, புதிய எண்ணெய் வயலைக் கண்டுபிடிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று சீன எண்ணெய் குழுமத்தைச் சேர்ந்த JIDONG எண்ணெய் வயலின் தலைமை மேலாளர் ZHOU HAI MIN கூறினார்.
1 2 3
|