• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-03 10:14:27    
சீனாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் எண்ணெய் வயல்

cri

புதிய எண்ணெய் வயலின் கண்டுபிடிப்பு, நாட்டின் எண்ணெய் மற்றும் எரி வாயுப் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எண்ணெய் அகழ்வுப் பணி ஆழமாக நடைபெறுவதுடன், தொடர்ந்து புதிய கண்டுப்பிடிப்புகள் நிகழக் கூடும் என்று சீன அறிவியல் கழக உறுப்பினரும் சீன எண்ணெய் கூட்டுப் பங்கு நிறுவனத்தின் துணைத் தலைவர் JIA CHENG ZAO கூறினார்.

தற்போதைய உலகில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக 2வது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாகச் சீனா திகழ்கின்றது. அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றுக்கு அடுத்ததாக 3வது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாகவும் உள்ளது. கடந்த ஆண்டில், சீனா இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் அளவு 16 கோடி டன்னை எட்டியது. இது கச்சா எண்ணெய் நுகர்வு அளவில் 50 விழுக்காடாகும். எனவே தற்போது NANPU எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டதால், சீனாவின் எரியாற்றல் பற்றாக்குறை நிலைமை பெரிதும் மாற்றப்படும். எரியாற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, செலவைக் குறைப்பதிலான சீனாவின் சுமையும் குறைக்கப்படும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து சீனச் சமூக மற்றும் அறிவியல் கழக உறுப்பினர் சாங்சொங்ஹுவா கூறியதாவது,

NANPU எண்ணெய் வயலின் கண்டுபிடிப்பால், சீனா எதிர்நோக்கும் எரியாற்றல் பற்றாக்குறை நிலைமையை முழுமையாக மாற்றி விட முடியாது. ஏனெனில், பொருளாதாரம் தொடர்ந்து வளர்வதுடனும் வாழ்க்கை நிலை மேம்படுவதுடனும் வாகன நுகர்வின் உச்ச நிலையில் சீனா நுழைந்துள்ளது. அதற்கு மேலும் அதிகமான எண்ணெய் தேவைப்படும் என்பதே உண்மை என்றார் அவர்.

100 கோடி டன் எண்ணெய் படிவ அளவு, 100 கோடி டன் எண்ணெய் அகழ்வு அளவுக்குச் சமம் என்று பொருட்படவில்லை. சீனா அதிகமான எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது என்ற நிலைமையைப் புதிய எண்ணெய் வயலின் கண்டுபிடிப்பு அடியோடு மாற்ற முடியாது என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் எரியாற்றல் ஆய்வகத்தின் தலைவர் ZHOU DA DIயும் கருத்து தெரிவித்தார்.

1 2 3