புதிய எண்ணெய் வயலின் கண்டுபிடிப்பு குறித்து மகிழ்ச்சி அடையும் அதே வேளை, மக்கள் தெளிந்த சிந்தனையுடன் செயல்பட வேண்டும். ஒரு முறை மட்டும்
பயன்படுத்தப்படக் கூடிய எண்ணெய் வளம், காலப் போக்கில் மென்மேலும் குறைந்து கொண்டே இருக்கும் என்பது உறுதி என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக சீனாவைப் பொறுத்தவரை, எரியாற்றல் வளர்ச்சியிலும் அதைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தி, மதிப்புள்ள எண்ணெய் வளம் மேலும் பெரும் பயனைத் தரச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். எரியாற்றலைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பது சீனப் பொருளாதார வளர்ச்சியில் எப்பொழுதும் கருத்தில் கொள்ள வேண்டிய குறிக்கோளாகும் என்று சாங்சொங்ஹுவா கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
நாம் தொடர்ந்து முயற்சியுடன் எரியாற்றல் வளத்தைச் சிக்கனப்படுத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, எரியாற்றல் செலவையும் தூய்மைக்கேட்டையும் குறைத்து, தற்போதைய பொருளாதார அதிகரிப்பு வழிமுறையை முற்றிலும் மாற்ற வேண்டும். தற்போது, அதிக அளவிலான மனித ஆற்றல் மற்றும் பொருள் ஆற்றலின் பயன்பாட்டையும் மூல வளங்களின் நுகர்வையும் சார்ந்திருக்கும் இந்த அதிகரிப்பு வழி முறையில் நீண்ட காலத்திலிருந்து பார்த்தால் பொருளாதாரத்தின் தொடர வல்ல வளர்ச்சி நனவாகாது. ஆகவே, NANPU எண்ணெய் வயலின் கண்டுபிடிப்பு, மூல வளத்தைச் சிக்கனப்படுத்தும் சமூகத்தை உருவாக்கும் சீனாவின் குறிக்கோளை மாற்ற முடியாது என்றார் அவர். 1 2 3
|