• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-09-03 17:07:28    
சோர்வாக மனம் குன்றி இருப்பது மன அழுத்தமல்ல

cri
எனக்கு தெரிந்த குடும்பம். பெற்றோருக்கு இரண்டு குழந்தைகள். வேணி வீட்டில் விழுந்து விழுந்து படிக்கிறவள். ஆனால் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்களை பெற்று பல வேளைகளில் தோல்வியை தான் பெறுவாள். கல்லூரியில் சேர்ந்த பின் நல்ல மதிப்பெண்கள் பெற உதவுங்கள் என அவளது பெற்றோர் கேட்டு கொள்ளவே நானும் அதற்கு இசைந்தேன். படிப்பில் வேணியை குறை சொல்ல முடியாது. கல்லூரி; இரண்டாமாண்டு இறுதி தேர்வும் வந்தது. எல்லா பாடங்களையும் படித்து சென்றும் வேணி தான் சரியாக தேர்வு எழுதவில்லை என என்னிடம் முறையிட்டாள். அவள் விளையாட்டாக சொல்லி இருக்கலாம் என இருந்து விட்டேன். தேர்வு முடிவுகள் வந்தன. வேணி வெற்றி பெறவில்லை.

ஆச்சரியமாக இருந்தது. எனது நண்பரிடம் இதனை நான் பகிர்ந்த கொண்ட போது அவர் ஓர் உளவியலாளரை அறிமுகப்படுத்தி வேணியை அங்கு அழைத்து சென்று பார்க்க சொன்னார். அவ்வண்ணமே ஆய்வு செய்து பார்த்தபோது பிரச்சனை அவளது மனதில் வேரூன்றி இருந்தமை கண்டறியப்பட்டது. மருந்து மாத்திரைகள் இன்றி பல பயிற்சிகள் மற்றும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள பல யுக்திகள் என வேணி முன்னேறி வருவது இன்று வரை எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

சோர்வாக இருப்பார்கள். மருத்துவரிடம் சென்று மிகவும் சோர்வாக, களைப்பாக இருக்கிறது என மருத்துவ ஆய்வுகள் செய்தால் ஏதும் இருக்காது. தற்போது பல நேரங்களில் இவ்வகை நோய்களை மன அழுத்தம், மன பதட்டம் என மருத்துவ சிகிச்சை செய்ய தொடங்கி விடுகிறார்கள்.

மன அழுத்தத்தை மருத்துவர்கள் குறைவாக மதிப்பிட்டு சுகாதரா அமைப்பிலேயே தேவையற்ற கறையை உருவாக்கி விட்டனர் என நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழக உளவியலாளர் கோர்டன் பார்க்கர் பிரிட்டன் மருத்துவ இதழில் எழுதியுள்ளார்.

1990 -களின் நடுவில் உளநலமருத்துவர்கள் அல்லாத பல மருத்துவர்கள் மன அழுத்திற்கு சிகிச்சை செய்துள்ளனர். நல்ல உடற்பயிற்சி, புதிய பொழுதுபோக்குகள் மற்றும் வாழ்வில் முக்கிய மாற்றங்களை பரிந்துரைக்காமல் பலரை மருந்து மாத்திரைகளோடு வாழும் மோசமான நிலைக்கு ஆளாக்கியுள்ளனர்.

1 2 3